Enable Javscript for better performance
பருவநிலை மாற்றம்: அரசியல் கட்சிகள் அக்கறை!- Dinamani

சுடச்சுட

    

    மக்களவைத் தேர்தலுக்கான அறிக்கைகளில் பருவநிலை மாற்றம் குறித்து அரசியல் கட்சிகள் முதல் முறையாக அக்கறை காட்டியுள்ளன.

    இது தொடர்பாக "கிளைமேட் பார்லிமென்ட்' என்ற அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாட்டின் பிராந்திய கட்சிகள் தொடங்கி தேசிய கட்சிகள் வரை தங்களது தேர்தல் அறிக்கையில் முதல் முறையாக சுற்றுப்புறச் சூழல், பருவநிலை மாற்றம், புதுப்பிக்கவல்ல சக்தி ஆகியன தொடர்பான அக்கறையை வெளிப்படுத்தியுள்ளன. குறிப்பாக, காங்கிரஸ், பாஜக, ஆம்ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் புதுப்பிக்கவல்ல எரிசக்தி திட்டம், பசுமைக் கட்டடங்கள், பசுமை நகரங்கள் ஆகியன உருவாக்கப்படும் என வாக்குறுதிகள் அளித்துள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காங்கிரஸ்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் "இயற்கை வளங்கள், சுற்றுச் சூழல் ஆகியவற்றைப் பாதுகாக்கும் வகையில், பாதுகாப்பு, தேசியச் சுற்றுச்சூழல் மதிப்பீடு, கண்காணிப்பு ஆணையகம், தேசிய காற்றாலை சக்தி திட்டம் தொடங்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாஜக: பாஜக தேர்தல் அறிக்கையில் "மாசு ஏற்படுத்தாத உற்பத்தி முறைகள் ஊக்குவிக்கப்படும். பசுமைக் கட்டடங்களின் கட்டுமானங்களுக்கு ஊக்கம் அளிக்கப்படும். ஆராய்ச்சி மேம்பாட்டுத் துறையில் சுற்றுச் சூழல் தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆம்ஆத்மி: ஆம்ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் "முக்கிய இயற்கை வளங்களான பிரதான தாதுக்கள், நீர், காடுகள் ஆகியன அரசின் கட்டுப்பாட்டில் வைக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மார்க்சிஸ்ட்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில், "சூரிய எரிசக்தி, உயிரி எரிசக்தி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கவல்ல எரிசக்திப்க் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

    இயற்கை, சுற்றுச்சூழல் சார்ந்த பேரிடர்களை சமாளிக்க மாநில அரசுகளை வலுப்படுத்துதல், நதிகளில் ஏற்பாடும் மாசுபாட்டைந்க் கண்காணித்தல், நதிப்படுகையில் ஏற்படும் மண்ணரிப்பை தடுத்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்' தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai