Enable Javscript for better performance
வாக்களித்தவர்களுக்கு சிறப்பு சலுகைகள்!- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு உணவகங்கள், சலூன்கள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்டவை பல்வேறு சலுகைகள், தள்ளுபடித் திட்டங்களை அறிவித்து மக்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தின.

    தில்லி பந்தாரா சாலையில் உள்ள புகழ்பெற்ற வட இந்திய உணவகம், வாக்களிப்போருக்கு 5 சதவீதம் தள்ளுபடியை அறிவித்தது. இது தொடர்பாக அந்த உணவகத்தின் (ஹேவ் மோர்) உரிமையாளர் வைபவ் பஜாஜ் கூறுகையில், "தேர்தலில் வாக்களிப்பதை ஊக்கப்படுத்த முடிவு செய்தோம். இதையடுத்து, எங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்துவருகிறோம்.

    எங்களுடையது குடும்ப உணவகம் (ஃபேமிலி ரெஸ்டாரன்ட்) என்பதால், இங்கு வருவோரைத் தேர்தலில் வாக்களிக்க ஊக்கப்படுத்தத் திட்டமிட்டோம். இதற்காக உணவகத்தில் 5 சதவீதம் தள்ளுபடியை அறிவித்தோம். இச் சலுகை ஏப்ரல் 15-வரை நீடிக்கும்' என்றார்.

    இது போல கிரேட்டர் கைலாஷில் இயங்கிவரும் "பிரெஞ்ச் பிஸ்ட்ரோ' உணவகவகமும் வாக்காளர்களுக்கு சலுகையை அறிவித்தது. இந் நிறுவனத்தில் உரிமையாளர் ராரா அவில் கூறுகையில், "தேர்தலில் அதிகமானோர் பங்கேற்று வாக்களிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில், சலுகைத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருள்களுக்கு 5 முதல் 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் நஷ்டம் ஏற்பட்டாலும், சமூக நோக்கத்துடன் தள்ளுபடி அளிக்க முன்வந்தோம்' என்றார்.

    இதேபோல, சத்யா நிகேதனில் உள்ள "துதே ஃபூட்' வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை வரை 10 சதவீதம் தள்ளுபடியை அறிவித்துள்ளது.

    சலூன்களில் சலுகை: உணவகங்களைப் போல தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு சலூன்களும் இதர அழகு நிலையங்களும் தள்ளுபடி மற்றும் சலுகையை அறிவித்துள்ளன. பெண் வாக்காளர்களை ஊக்கப்படுத்த "லேக்மி சலூன்' 50 சதவீதம் தள்ளுபடியை அறிவித்துள்ளது. "ஃப்ளூயிட் ஜிம்' எனும் உடற்பயிற்சி நிலையத்தின் உறுப்பினர் சேர்க்கை கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடியை தேர்தல் நாள் சிறப்பு சலுகையாக அறிவிக்கப்ட்டிருக்கிறது.

    தில்லியில் உள்ள குறிப்பிட்ட சில பெட்ரோல் நிலையங்களில் வாக்களித்தவர்களுக்கு லிட்டருக்கு 50 பைசா தள்ளுபடி சலுகை வழங்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai