Enable Javscript for better performance
இசைக் கலைஞர்களுக்கு சங்கீத நாடக அகாதெமி விருது- Dinamani

சுடச்சுட

  

  இசைக் கலைஞர்களுக்கு சங்கீத நாடக அகாதெமி விருது

  By புது தில்லி,  |   Published on : 12th April 2014 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இசைத் துறையில் சாதனை படைத்துவரும் கர்நாடக இசைப் பாடகி அருணா சாய்ராம், மிருதங்க வித்வான் திருச்சி சங்கரன், நாகஸ்வர வித்வான் திருவிழா ஜெய்சங்கர், பரதக் கலைஞர் ஜமுனா கிருஷ்ணன் உள்ளிட்ட கலைஞர்களுக்கு 2013-ஆம் ஆண்டுக்கான சங்கீத நாடக அகாதெமி விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெள்ளிக்கிழமை வழங்கி கௌரவித்தார்.

  இசைத் துறையில் படைப்புத் திறன், புதிய முயற்சிகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றுக்காக இந்த விருதை தகுதி வாய்ந்த கலைஞர்களுக்கு சங்கீத அகாதெமி ஆண்டுதோறும் வழங்கிவருகிறது. இதையொட்டி, தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாதனை கலைஞர்களுக்கு விருதுகளை பிரணாப் முகர்ஜிவழங்கினார்.

  விருது பெற்றோர் விவரம் (அடைப்புக்குறிக்குள் பிரிவு):

  அகாதெமி ரத்னா புரவலர் விருதுகள்: டாக்டர் கனக் ரெலே, ஆர். சத்யநாராயணா, மகேஷ் எல்குஞ்ச்வார். இவர்களுக்கு தலா ரூ. 3 லட்சம் ரொக்கம், அங்கவஸ்திரம், தாமரைப் பத்திரம் ஆகியவை வழங்கப்பட்டன.

  இசை: ரித்விக் சன்யால், வீணா சஹஸ்ரபுத்தே (ஹிந்துஸ்தானி வாய்ப்பாட்டு); தப்லா கலைஞர் ஹஷ்மத் அலி கான், சாரங்கி கலைஞர் த்ருபஜோதி கோஷ் (ஹிந்துஸ்தானி இசை); அருணா சாய்ராம், ஹைதராபாத் சகோதரர்கள் டி. ராகவாச்சாரி-சேஷாச்சாரி (கர்நாடக வாய்ப்பாட்டு), மிருதங்க வித்வான் திருச்சி சங்கரன், நாகஸ்வர வித்வான் திருவிழா ஜெய்சங்கர் (கர்நாடக இசை); பங்கிம் சேத்தி (ஓடிஸி இசை).

  நடனம்: ஜமுனா கிருஷ்ணன், பி. ஹேரம்பநாதன் (பரதநாட்டியம்); ராஜஸ்ரீ ஷிர்கே (கதக்); கலாமண்டலம் எம்.பி.எஸ். நம்பூதிரி (கதகளி); சிந்தா சீதா ராமாஞ்சனேயுலு (குச்சுப்புடி); சங்கீதா தாஷ் (ஓடிஸி); ஜோகன் தத்தா பயான் (ஸத்ரியா); ஸ்ரீநிவாச

  ரங்காச்சாரியார் (அரையர் சேவை); தனேஸ்வர் ஸ்வெயின் (மர்தள மேளம்).

  மேடை நாடகம்: ரமேஷ்வர் பிரேம், புண்டலிக் நாராயண் நாயக் (வசனம்); கமலாகர் சோன்டக்கே, கேவல் தாலிவால், பிரசன்னா ராமசுவாமி (இயக்கம்), வசந்த் ஜோஸால்கர், குஸும் ஹைதர் (நடிப்பு), கிருஷ்ணா அர்ஜுன் போர்கர் (ஒப்பனை).

  பாரம்பரிய, பழங்குடியின இசை, பொம்மலாட்டம்: ராஜ் பேகம் (ஜம்மு கிராமிய இசை), டி.ஏ.ஆர். நாடி ராவ், என். ஜீவா ராவ் (தமிழக கிராமிய இசை), குர்தயாள் சிங் (கிராமியக் கருவி தயாரித்தல்), மோகன் சிங் கங்குரா (ரவீந்திர சங்கீதம்); உமாகாந்த பைராகி (அசாமிய டோக்ரி, தேபிசார் கீதங்கள்); லீலாவதி எம். கவி (பொம்மலாட்டம்); கே. மீனாட்சி (இசைக்கருவி தயாரித்தல்-கடம்); ஷேக் ரியாஜோடின் அபுல் கனி (மகராஷ்டிர கிராமிய மேடை நாடகம்).

   மைசூர் வி. சுப்பிரமண்யா, என். ராமநாதன் ஆகியோருக்கு அகாதெமியின் ஸ்காலர்ஷிப், ஒட்டுமொத்த பங்களிப்புக்கான விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai