Enable Javscript for better performance
கலை, இலக்கியம், சமூக அறிவியல் கல்வி தேவை- Dinamani

சுடச்சுட

    

    தற்போதைய சூழலில் கலை, இலக்கியம், சமூக அறிவியல் கல்வி அவசியமாகிறது என்று தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் வலியுறுத்தினார்.

    தில்லி லாஜ்பத் நகரில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் முக்கிய விருந்தினராகப் பங்கேற்ற தில்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் பேசியது: பாலின வேறுபாடுகள், சாதி, மத வேறுபாடுகள், மத துவேஷம், பிராந்திய சிக்கல் ஆகிய பிரச்னைகள் சமூகத்தில் நிலவுகின்றன.

    இப் பிரச்னைகளை எதிர்கொள்ளவும் தீர்வு காணவும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கலை, இலக்கியம், சமூக அறிவியல் கல்வி அவசியமாகிறது. இத் துறைகளில் பயிற்சியும் தேவைபடுகிறது.

    கலை, ஊடகம், கல்வி, கார்ப்ரேட், நிர்வாகம் என அனைத்துத் துறைகளிலும் கல்வி அளித்து, தொழில்ரீதியான திறமைகளை உருவாக்கி பெண்கள் மத்தியில் தன்னம்பிக்கை, தலைமைப் பண்புகளை லேடி ஸ்ரீராம் கல்லூரி ஏற்படுத்தி வருகிறது. தலைமைப் பொறுப்புகளை ஏற்பதற்கு, சீர்தூக்கிப் பார்ப்பதற்கு பெண்களை சிந்தனையாளர்களாக மாற்றும் பணியை இக் கல்லூரி தொடர்ந்து செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்

    நஜீப் ஜங்.

    இந் நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்களுக்கும் கல்லூரியில் 25 ஆண்டுகளாகப் பணிபுரியும் பேராசிரியர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கும் பரிசுகளை நஜீப் ஜங் வழங்கினார். இதில், கல்லூரி முதல்வர் மீனாட்சி கோபிநாத், தலைவர் அருண் பரத் ராம், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து

    கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai