Enable Javscript for better performance
தில்லியில் 30 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் 30 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு

    By புது தில்லி,  |   Published on : 12th April 2014 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 30 ஆண்டு காலத்தில் இல்லாத அளவாக 65.05 சதவீதம் வாக்குகள் பதிவாகின என்று தலைமைத் தேர்தல் அதிகாரி விஜய் தேவ் தெரிவித்தார்.

    இது தொடர்பாக வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தில்லியில்

    அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் 78.75 லட்சம் பேர் வாக்களித்தனர்.

    இந்த மக்களவைத் தேர்தலில் மொத்தம் 82.65 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். பேரவைத் தேர்தலைக் காட்டிலும் 3.90 லட்சம் பேர் கூடுதலாக வாக்களித்துள்ளனர். இதற்காக தில்லி வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக்

    கொள்கிறேன்.

    வாக்குப் பதிவு விகிதம்: மக்களவைத் தொகுதி வாரியாக வாக்கு சதவீதம் விவரம்:  (அடைப்புக்குறிக்குள் 2009 தேர்தல் வாக்குப்பதிவு): கிழக்கு தில்லி 65.59 (53.44); வடகிழக்கு தில்லி 63.08 (52.39); புது தில்லி 65.03 (55.83); சாந்தினி செளக் 67.13 (59); வட மேற்கு தில்லி 61.38 (47.44); மேற்கு தில்லி 66.03 (52.47); தெற்கு தில்லி 62.98 (47.14).

    இத் தேர்தலில் சாந்தினி செளக் தொகுதியில்தான் அதிகபட்சமாக 67.13 சதவீதமும் குறைந்த அளவாக வடமேற்கு தில்லியில் 61.38 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. 2009 தேர்தலில் அதிகபட்சமாக 55.83 சதவீதம் புது தில்லி தொகுதியிலும், குறைந்த அளவாக 44.14 சதவீதம் தெற்கு தில்லியிலும் பதிவாகின.

    வாக்குப்பதிவு நாளில் 128 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இத் தேர்தலில் ஆயுதச் சட்டம், வருமான வரிச் சட்டம் ஆகியவற்றின் கீழ் 350 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டன. ரொக்கம் ரூ. 1,53,28,000 பறிமுதல் செய்யப்பட்டது. முறையான உரிமம் இல்லாத 96 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. தேர்தலையொட்டி 677 துப்பாக்கிகள்  காவல் நிலையங்களில் தாற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டன.

    மாற்றுத் திறனாளிகளுக்கு வசதி: நாட்டில் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க இத் தேர்தலில் வசதி செய்யப்பட்டது.

    இதற்காக தில்லி தேர்தல் ஆணைய இணையதளத்தில் சிறப்பு வசதி செய்யப்பட்டு, மாற்றுத் திறனாளிகள் விவரங்கள் பெறப்பட்டன.

    அனைத்து வாக்கு மையங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்காக சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டு, அவர்களுக்கு உதவியாளர்களும் நியமிக்கப்பட்டனர். வாக்குப்பதிவை அதிகரிக்கும் வகையில்,  தேர்தலுக்கு முன்பு 9,220 மாதிரி வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு, வாக்காளர்களின் சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கப்பட்டன.

    தேர்தல் விழிப்புணர்வு: வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நாளேடுகள், வானொலி, தொலைக்காட்சி ஆகிய ஊடகங்களில் மூலமும், தில்லி டிடிசி பஸ்கள், மெட்ரோ ரயில்கள் ஆகியவற்றின் மூலமும் விளம்பரம் செய்யப்பட்டன. சினிமா, விளையாட்டுத் துறை பிரபலங்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

    தெருமுனை நாடகம், தேர்தல் விழா ஆகியவையும் நடத்தப்பட்டன. முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கல்லூரிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பாதுகாப்பு: தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் சீல் வைக்கப்பட்ட 21,967 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்

    பட்டுள்ளன.

    இம் மையங்களுக்கு உள்புறப் பாதுகாப்புப் பணியில் துணை ராணுவப் படையினரும் வெளிப்புறத்தில் தில்லி போலீஸாரும் என மொத்தம் 20 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர் என்றார்

    விஜய் தேவ்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai