Enable Javscript for better performance
தில்லி தமிழ்ச் சங்கத்தில் சித்திரைத் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    தில்லி தமிழ்ச் சங்கத்தில் சித்திரைத் திருவிழா

    By புது தில்லி  |   Published on : 12th April 2014 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தில்லி தமிழ்ச் சங்கத்தில் "சித்திரைத் திருவிழா-2014' சனிக்கிழமை (ஏப்ரல் 12) தொடங்கி திங்கள்கிழமை வரை நடைபெற உள்ளது.

     "தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஆண்டுதோறும் தில்லி தமிழ்ச் சங்கம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டும் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு "சித்திரைத் திருவிழா-2014' சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.

     இதையொட்டி பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகர் மதன் பாப் மெல்லிசை நிகழ்ச்சி சனிக்கிழமை தமிழ்ச் சங்க திருவள்ளுவர் கலையரங்கில் நடைபெற உள்ளது. இந் நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் எம்.என்.கிருஷ்ணமணி தலைமை வகிக்கிறார். பொதுச் செயலாளர் இரா.முகுந்தன் வரவேற்புரையாற்றுகிறார்.

     ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 13) ப.அறிவழகன் தலைமையில் "திருமண வாழ்வில் வெற்றி தருவது காதல் திருமணமா? பெரியோர் நிச்சயிக்கும் திருமணமா?' என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற உள்ளது. காதல் திருமணமே என்று பெ.ராகவன் நாயுடு, எம்.ஆறுமுகம், ப.ராமமூர்த்தி, பி.சங்கர் ஆகியோரும், பெரியோர் நிச்சயிக்கும் திருமணமே என்று ஏ.விஜயகுமார், ஏ.வெங்கடேசன், பி.தெய்வசிகாமணி, எம்.ரமேஷ் ஆகியோரும் வாதிட உள்ளனர்.

     திங்கள்கிழமை (ஏப்ரல் 14) ஜெயஸ்ரீ ரங்கநாதனின் மாணவி கலைவாணி கணேஷின் தமி

    ழிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. வி.எஸ்.கே.அண்ணாதுரை (வயலின்), கும்பகோணம் என்.பத்மநாபன் (மிருதங்கம்), மன்னை என்.கண்ணன் (கடம்) ஆகியோர் பக்கவாத்தியம் வாசிப்பர்.

     ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாள்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அனைவருக்கும் இரவு விருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தில்லி தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் இரா.முகுந்தன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்  தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai