மெட்ரோ ரயில் முன் குதித்து பெண் தற்கொலை
By புது தில்லி, | Published on : 12th April 2014 12:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தில்லியில் நான்கு குழந்தைகளின் தாய், மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
வியாழக்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்து போலீஸார் கூறியது: தில்லி சங்கம் விஹார் பகுதியில் வசித்து வந்தவர் தஸ்லிமா பானு (36). இவருக்கு 4 குழந்தைகள் உள்ளன. கணவரைவிட்டுப் பிரிந்து வாழ்ந்து வந்த அவர், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந் நிலையில், வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் சாகேத் மெட்ரோ ரயில் நிலையம் வந்த அவர், நடைபாதையில் நின்று கொண்டிருந்தார். ஜஹாங்கீர்புரி செல்லும் மெட்ரோ ரயில் வந்தபோது அதன் முன் குதித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் விசாரணை நடைபெற்றுவருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.