Enable Javscript for better performance
மோடிக்கு எதிராக மகளிர் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மோடிக்கு எதிராக மகளிர் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

    By புது தில்லி,  |   Published on : 12th April 2014 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருமண விவகாரம் தொடர்பாக குஜராத் முதல்வரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு எதிராக தில்லி மகளிர் காங்கிரஸார் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

     இந்த ஆர்ப்பாட்டத்தில் தில்லி பிரதேச மகிளர் காங்கிரஸ் தலைவர் ஓனிகா மெஹரோத்ரா பேசுகையில், "பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசி வரும் நரேந்திர மோடி, அவருக்குத்  திருமணமான விவகாரத்தை இதுநாள் வரை மறைத்துள்ளார்.

    கடந்த 40 ஆண்டுகளாக அவரது மனைவியின் பெயரை வெளியிடவோ, அவருக்கு சட்ட ரீதியான உரிமைகளை வழங்கவோ இல்லை. இதன் மூலம் பெண்களை அவமானப்படுத்தியுள்ளார்.

    திருமணம் குறித்து உண்மையான தகவல் தெரிவிக்காதது, பொய்யான தகவலை நாட்டு மக்களுக்குத் தெரிவித்தது குற்றமாகும். இதன் மூலம் அவர் உண்மைகளை மறைப்பது தெளிவாகிறது. திருமணம் குறித்த உண்மையை மறைத்தற்காக மக்களிடம் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்' என்றார்.

     முன்னதாக, தீனதயாள் உபாத்யாய மார்கில் உள்ள தில்லி பிரதேச காங்கிரஸ் அலுவலகத்தில் மகளிர் காங்கிரஸ் உறுப்பினர்கள், மெஹரோத்ரா தலைமையில் கூடினர்.

    இதைத் தொடர்ந்து, ஐடிஓ செளக் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்ய முற்பட்டபோது போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai