Enable Javscript for better performance
வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு- Dinamani

சுடச்சுட

    

    வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

    By புது தில்லி  |   Published on : 12th April 2014 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக தில்லி தேர்தல் ஆணைய உயர் அதிகாரி கூறியது: "தில்லியில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை மாலை 6 மணியுடன் முடிவடைந்தது.

    அதைத் தொடர்ந்து, வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேர்தல் அதிகாரிகள், வேட்பாளர்கள்  முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்குப் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.

    அந்த மையங்களில் மத்திய துணை ராணுவத்தினர் கண்காணிப்பில் ஈடுபட்டு

    வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 16-ஆம் தேதி வரை வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டிருக்கும்'

    என்றார்.

    வாக்குப்பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்கள் விவரம் (அடைப்புக்குறியில் மக்களவைத் தொகுதி): கோல் மார்க்கெட்டில் உள்ள நகர்பாலிகா பெங்காலி பெண்கள் மேல்நிலை பள்ளி (புது தில்லி); ஜி.டி. கர்னால் சாலையில் உள்ள ஆர்யபட் பாலிடெக்னிக் (சாந்தினி சௌக்); கேல்கான் காமன்வெல்த் கேம்ஸ் வில்லேஜ் (கிழக்கு தில்லி); நந்த் நகரி ஐடிஐ (வடகிழக்கு தில்லி); துவாரகா 9-ஆவது செக்டார் இன்டக்ரேட்டட் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (மேற்கு தில்லி); குல்மோஹர் பார்க், ஆகஸ்ட் கிராந்தி மார்கில் உள்ள ஜிஜாபாய் ஐடிஐ (தெற்கு தில்லி); ரோஹிணி தில்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (வடமேற்கு).

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai