Enable Javscript for better performance
அண்டை மாநிலத் தேர்தல் பிரசாரம்:தில்லி பாஜக தொண்டர்கள் பயணம்- Dinamani

சுடச்சுட

    

    அண்டை மாநிலத் தேர்தல் பிரசாரம்:தில்லி பாஜக தொண்டர்கள் பயணம்

    By புது தில்லி  |   Published on : 13th April 2014 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைத் தேர்தல் பணியாற்ற உத்தர பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகண்ட் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு தில்லி பிரதேச பாஜக தொண்டர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்று அக் கட்சியின் பிரதேச தலைவர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் சனிக்கிழமை கூறியது: தில்லியில் மக்களவைத் தேர்தல் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, அண்டை மாநிலங்களில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட கட்சியின் தில்லி தொண்டர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதற்காக தில்லி பிரதேச மாவட்டத் தலைவர்கள், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    தேர்தலில் வெற்றி பெற தேர்தல் மேலாண்மையை திறம்பட மேற்கொள்வது அவசியம். இதைக் கருத்தில் கொண்டு குறிப்பாக வாக்குப்பதிவு மையங்களில் தன்னார்வமிக்க பாஜக தொண்டர்கள் பணியில் ஈடுபடுவார்கள்.

    தொண்டர்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கட்சி பாஜக. இதனால்தான், ஒரு காலத்தில் டீ விற்றவரான நரேந்திர மோடி தற்போது பிரதமர் பதவி வேட்பாளாராக நிறுத்தப்பட்டுள்ளார் என்றார் ஹர்ஷ் வர்தன். மூத்த தலைவர் விஜய் குமார் மல்ஹோத்ரா கூறுகையில், "நாட்டில் மிக முக்கியத் திருப்பத்தை மக்களவைத் தேர்தல் ஏற்படுத்தும்.

    தேர்தலில் தோல்வியடைவது குறித்து மற்ற கட்சிகளுக்கு கவலை இல்லை. மாறாக நரேந்திர மோடியை பிரதமராகாமல் தடுப்பது எப்படி என்பதே அக் கட்சிகளின் கவலையாக உள்ளது.

    இதனால்தான், காங்கிரஸ் கட்சின் "பி-டீம்' -ஆக ஆம்ஆத்மி கட்சி செயல்பட்டு வருகிறது. இந்த உண்மையை வாக்காளர்கள் அறிவார்கள். காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகளுக்கு தேர்தலில் மக்கள தகுந்த பாடத்தைப் புகட்டுவார்கள் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai