Enable Javscript for better performance
இந்திய தகவல் பணி பயிற்சி அதிகாரிகள் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு- Dinamani

சுடச்சுட

    

    இந்திய தகவல் பணி பயிற்சி அதிகாரிகள் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு

    By புது தில்லி,  |   Published on : 13th April 2014 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்திய தகவல் பணி பயிற்சி அதிகாரிகள் குழு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சனிக்கிழமை நேரில் சந்தித்தனர்.

    இந்திய தகவல் பணியில் கடந்த 2011, 2012, 2013-ஆம் ஆண்டுப் பிரிவைச் சேர்ந்த பயிற்சி அதிகாரிகள் குடியரசுத் தலைவரை புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேரில் சென்று சந்தித்தனர்.

    அப்போது அவர்கள் மத்தியில் குடியரசுத் தலைவர் பேசியதாவது: "அறிவே தெய்வம். அறிவின் அடிப்படைதான் தகவல். இந்திய தகவல் பணி அதிகாரிகள், மக்களுக்கான அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்த தகவல்களை பல இடங்களிலும் பரவிடச் செய்வதன் மூலம் மக்களுக்கும் அரசுக்கும் இடையே ஒரு முக்கிய இணைப்பாக பணியாற்றுகின்றனர்.

    தற்போது, தங்குதடையில்லாமல் தகவல்கள் கிடைக்கும் யுகத்தில் நாம் இருக்கிறோம். தகவல்கள் கொள்கைளை உருவாக்குவோருக்கு கிடைக்கும் முன்பாக அவற்றை பகுப்பாய்வு செய்வதையும் மதிப்பிடுவதையும் இந்திய தகவல் பணி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான், கொள்கை உருவாக்கத்தின் ஒரு முக்கியமான கருவியாக அவை பணியாற்ற முடியும்.

    தகவல் தொழில்நுட்பத் துறையில் படிப்படியான வளர்ச்சி ஏற்பட்டு வருகின்றன. சமூக ஊடகமும் ஆச்சரியப்படத்தக்க வகையில் உள்ளது.

    ஆகவே, தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுவரும் புரட்சி மாற்றங்களுக்கு ஏற்ப, அவற்றை நாட்டின் பணியில் சிறந்த முறையில் பயன்படுத்தும் வகையில் இந்திய தகவல் பணி அதிகாரிகள் தங்களது அறிவுத் திறனையும் உயர்த்திக் கொள்வதில் தொடர்ந்து ஆர்வம் காட்டுவது அவசியம் என்று குடியரசுத் தலைவர் கேட்டுக் கொண்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai