Enable Javscript for better performance
இன்று போக்குவரத்து மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    தில்லி ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமையும்

    போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என்று போக்குவரத்து போலீஸார் தெரிவித்தனர்.

    ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் தேரா ஸச்சா செüதா என்ற ஆன்மிக அமைப்பு சார்பில் ரத்த தான முகாம் சனிக்கிழமை காலை 7.30 முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. இதில் 20,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர்.

    இதைத் தொடர்ந்து, அதே அமைப்பு சார்பில் ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் "மேஸ்ட்ரோ-மாஸ்ட் ருஹாணி ரூப்ரு நைட்' என்ற நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 முதல் இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது. இதனால், சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து மாறுதல்கள் ஞாயிற்றுக்கிழமையும் தொடரும் என்றும் போக்குவரத்து போலீஸார் அறிவித்துள்ளனர். இதன்படி

    தற்கு தில்லிக்கு உள்பட்ட லோதி ரோடு, பீஷ்ம பிதாமஹ மார்க், லாலா லாஜ்பத் ராய் மார்க் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன.

    இது குறித்து தில்லி போக்குவரத்து கூடுதல் போலீஸ் ஆணையர் அனில் சுக்லா கூறுகையில், "சனி, ஞாயிறு ஆகிய இருநாள்களும் ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லோதி ரோடு, பீஷ்ம பிதாமஹ மார்க் மற்றும் லாலா லாஜ்பத் ராய் மார்க் ஆகிய வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், ஞாயிற்றுக்கிழமை மாலை 4 முதல் இரவு 10 மணி வரை அங்கு செல்ல வேண்டாம்' என்று அனில் சுக்லா தெரிவித்தார்.

    மேலும், இந் நிகழ்ச்சிக்கு வருபவர்கள் அனைவரும் ஸ்டேடியத்துக்குள்தான் தங்கள் வாகனங்களை நிறுத்த வேண்டும் என்றும், லோதி ரோடு, பீஷ்ம பிதாமஹ மார்க் ஆகிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்தக் கூடாது எனவும் போக்குவரத்து போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai