Enable Javscript for better performance
\\\"இலக்கை எட்ட அயராது பணியாற்றும் ஊழியர்கள்\\\' - Dinamani

சுடச்சுட

    

    இந்திய ரயில்வே வகுத்துள்ள குறிக்கோள் மற்றும் இலக்குகளை அடைய அர்ப்பணிப்பு உணர்வுடன் ரயில்வே ஊழியர்கள் அயராது உழைத்துவருவதாக ரயில்வே வாரிய தலைவர் அருணேந்திர குமார் பாராட்டினார்.

    59-வது ரயில்வே வார விழாவையொட்டி தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பாகப் பணியாற்றிய ரயில்வே ஊழியர்களுக்கு விருதுகளை வழங்கிப் பேசுகையில் அவர் இவ்வாறு பாராட்டினார். அவர் பேசுகையில், "இந்திய ரயில்வே வகுத்துள்ள குறிக்கோள் மற்றும் இலக்குகளை அடைய அர்ப்பணிப்பு உணர்வுடன் ரயில்வே ஊழியர்கள் அயராது உழைத்துவருகின்றனர். சிறப்பாகப் பணியாற்றி பரிசுகள் வென்றுள்ள ஊழியர்கள், இதைவிடச் சிறந்த பங்களிப்பை அடுத்த ஆண்டு அளிக்க வேண்டும்' என்றார். ரயில்வே வாரியச் செயலாளர் பி.சி.காஜ்பியா பேசுகையில், "ரயில்வே ஊழியர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரவே ரயில்வே வாரம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவருகின்றன. கடந்த 2013-14-ஆம் ஆண்டு என்ஜின்களை சிறப்பாகப் பராமரித்து இயக்கிய பிரிவினர், ரயில்வே துறை சார்பில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகளை வென்ற 170 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பரிசுகள், ரொக்கப் பரிசு வழங்கி கெüரவிக்கப்பட்டனர்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai