Enable Javscript for better performance
காஸ் சிலிண்டர் வெடித்து இளைஞர்கள் இருவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    காஸ் சிலிண்டர் வெடித்து இளைஞர்கள் இருவர் சாவு

    By புது தில்லி  |   Published on : 13th April 2014 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வடகிழக்கு தில்லியில் காஸ் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர். மற்றொருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது: வடகிழக்கு தில்லி பஜன்புரா பகுதியில் காஸ் சிலிண்டர் வெடித்ததாக சனிக்கிழமை மாலை 4 மணியளவில் தகவல் கிடைத்தது. தீயணைப்பு படையினர் உடனடியாக அங்கு விரைந்து சென்றனர். கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீ போராடி அணைக்கப்பட்டது. இதில் ருஸ்தம் (28), இர்ஃபான் (26) ஆகிய இருவரும் இறந்தனர். ஹுமந்து (40) என்பவர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு 50 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    விபத்து நிகழ்ந்த இடத்தில் தரை விரிப்பு தயாரிக்கும் சிறிய தொழிற்சாலை இயங்கி வந்துள்ளது. அங்கு பயன்படுத்தி வந்த காஸ் சிலிண்டர் வெடித்ததால்தான் இந்த விபத்து ஏற்பட்டு இருவர் உயிரிழந்துள்ளனர் என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மற்றொரு சம்பவத்தில், பிரகதி மைதானம் 9-ஆம் எண் நுழைவுவாயில் அருகே சிறு தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதாகவும் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai