Enable Javscript for better performance
தில்லிகை இலக்கிய வட்ட கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தில்லிகை இலக்கிய வட்டம், தில்லி தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து மாதாந்திர இலக்கியக் கூட்டத்தை தமிழ்ச் சங்க அரங்கில் சனிக்கிழமை நடத்தின.

    இக் கூட்டத்தில் "புதினம்' என்ற தலைப்பை மையக் கருவாகக் கொண்டு, "பிரதாப முதலியார் சரித்திரம் கட்டமைக்கும் பெண்மை' எனும் தலைப்பில் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட ஆய்வாளர் மு.முரளி, "எச்சத்தாற் காணப்படும்:

    இர்விங் வாலஸ் புதினத்தின் அடிப்படையில்' எனும் தலைப்பில் மேலாண்மைக் கல்வி பயிற்றுநர் சேதுராமலிங்கம் ஆகியோர் உரையாற்றினர்.

    முரளி பேசுகையில், "வேதநாயகம் பிள்ளை அன்றே தன் படைப்புகளில் பெண்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார். பெண், தன் மீது திணிக்கப்படுகிற கொடுமையை எதிர்த்து கேட்பதாக பெண்களின் உரிமைக்கு குரல் கொடுத்த முதல் புதினமாக இது அமைந்துள்ளது' என்று குறிப்பிட்டார்.

    சேதுராமலிங்கம் பேசுகையில், "இர்விங் வாலஸ் எழுதிய "தி மேன்' என்ற புதினம் கற்பனையால் உருவாக்கப் பெற்றது என்றாலும் நம்முடைய வாழ்வின் அன்றாட நிகழ்வுகளை நினைவுப்படுத்துவதாகவே அமைந்துள்ளது' என்றார்.

    இறுதியாக ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வாளர் இரா. தமிழ்ச் செல்வன், ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய "நாவலும் வாசிப்பும்: ஒரு வரலாற்றுப் பார்வை' என்ற நூலை அறிமுகப்படுத்திப் பேசினார். அவர் தனது உரையில், "நாவல் என்ற மேலைநாட்டுக் கலை வடிவம் தமிழ்ச் சமூகத்தில் நிலைபெற்றது' என்று குறிப்பிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai