Enable Javscript for better performance
தில்லியில் உ.பி. சிறுமி மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் அதிக சம்பளம் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட 11 வயது சிறுமி தன்னார்வ நிறுவனத்தின் உதவியுடன் மீட்கப்பட்டார். இது பற்றிய விவரம் வருமாறு:

    உத்தர பிரதேச மாநிலம், ஷிகோஹாபாத் கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை அதே கிராமத்தைச் சேர்ந்த பிரீதி ரூபேஷ் என்பவர் தில்லியில் துவாரகா செக்டர் 18-இல் உள்ள தனது வீட்டுக்கு பணிப் பெண் வேலைக்காக ஓராண்டுக்கு முன்பு அழைத்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதிக சம்பளம் கிடைப்பதாக பிரீதி அளித்த உத்தரவின் பேரில் சிறுமியை அவரது பெற்றோர் அனுப்பிவைத்தனர்.

    இந் நிலையில், சிறுமிக்கு போதிய சம்பளமும் உணவும் தராமல் கொடுமைப்படுத்துவதாக பச்பன் பச்சாவோ ஆந்தோலன் எனும் தன்னார்வ அமைப்புக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் உதவியுடன் சம்பந்தப்பட்ட சிறுமி மீட்கப்பட்டார்.

    சிறார் நீதிக் குழுமம் முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட அச் சிறுமி, மகளிர் மறுவாழ்வு மையத்தில் தங்கவைக்க அனுப்பப்பட்டார். மேலும், சிறுமியைக் கொடுமைப்படுத்தியதாக பிரீதி ரூபேஷ் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து பச்பன் பச்சாவோ ஆந்தோலன் அமைப்பைச் சேர்ந்த ராகேஷ் சங்கர் கூறுகையில், "இதுபோன்று குழந்தைகளை வீட்டுக்கு வேலைக்கு அழைத்து வந்து கொடுமைப்படுத்துவோர் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். ஆனால், பெயரளவுக்கு சில பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்வதால் குற்றமிழைக்கும் நபர்களுக்குப் போதுமான தண்டனை கிடைப்பதில்லை' என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai