Enable Javscript for better performance
தேர்தல் விதிமீறல் மீது உடனடி நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    : தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான சம்பவங்களில் உடனடியாக, உரிய நடவடிக்கையை எடுக்குமாறு அனைத்து மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    சமாஜ்வாதி கட்சித் தலைவர் ஆஸம் கான், பாஜக பொதுச் செயலர் அமித் ஷா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் சிலர் தேர்தல் விதிகளை மீறும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் இந் நடவடிக்கையை எடுத்துள்ளது.

    உத்தர பிரதேச மாநிலத்தில் அண்மையில் தேர்தல் பிரசாரத்தின்போது சமாஜ்வாதி கட்சியின் மூத்த அமைச்சர் ஆஸம் கான், கார்கில் போர் தொடர்பாக பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியதாக சர்ச்சை எழுந்தது. அதேபோன்று, மற்றொரு பிரசாரக் கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அமித் ஷா, இனம், மதம் அடிப்படையில் வாக்குக் கேட்டதாகவும் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து இரு தலைவர்களும் உத்தர பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

    தேர்தல் பிரசாரத்தின்போது மத உணர்வுர்களைப் புண்படுத்தும் வகையில் அரசியல் கட்சித் தலைவர்கள் பேசுவைத் தடுக்க இந் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.

    இந் நிலையில், தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான சம்பவங்களில் உடனடியாகவும் உரிய வகையிலும் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கும் ஆணையம் சனிக்கிழமை அறிவுறுத்தியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai