Enable Javscript for better performance
நின்றிருந்த வேன் மீது கார் மோதல்:தனியார் நிறுவன ஊழியர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    நின்றிருந்த வேன் மீது கார் மோதல்:தனியார் நிறுவன ஊழியர் சாவு

    By புது தில்லி,  |   Published on : 13th April 2014 12:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தெற்கு தில்லியில் சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த வேன் மீது கார் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் இறந்தார். இருவர் காயமடைந்தனர்.

    இது குறித்து போலீஸார் கூறியது: தேசிய தலைநகர் வலயம், குர்கான் பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப் கமல் (32). தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்தார். இவரது நண்பர்கள் மணீஷ், வருண்.

    இவர்கள் மூவரும் தில்லி கனாட் பிளேஸ் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர். காரை சந்தீப் கமல் ஓட்டிச் சென்றார். அப்போது டயர் பழுது காரணமாக ஆர்டிஆர் மேம்பாலப் பகுதியில் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ஏற்றிய வேன் வேன் மீது கார் மோதியது. இதில் மூவரும் காரின் இடிபாடுகளில் சிக்கினர்.

    தகவலறிந்ததும் போலீஸார் விரைந்து சென்று மூவரையும் மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சந்தீப் கமல் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மணீஷ், வருண் ஆகிய இருவரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai