Enable Javscript for better performance
நொய்டாவில் வெவ்வேறு விபத்துகளில் கல்லூரி மாணவி உள்பட 3 பேர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    நொய்டாவில் வெவ்வேறு விபத்துகளில் கல்லூரி மாணவி உள்பட 3 பேர் சாவு

    By புது தில்லி  |   Published on : 13th April 2014 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசியத் தலைநகர் வலயம், நொய்டாவில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் கல்லூரி மாணவி உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

    இதுகுறித்து போலீஸார் சனிக்கிழமை கூறியதாவது: நொய்டா அருகே உள்ள சிர்சா கிராமத்தைச் சேர்ந்தவர் சுனிதா. வெள்ளிக்கிழமை இரவில் அப் பகுதியில் வேகமாகச் சென்ற லாரி மோதியதில் சுனிதா பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் உயிரிழந்தார்.

    பைக் மோதல்: கிரேட்டர் நொய்டா பகுதியில் செக்டார் 146-இல் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சஞ்சய் என்பவர் மீது மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.

    லாரி மோதி ஒருவர் சாவு: மற்றொரு விபத்தில், கிரேட்டர் நொய்டாவில் உள்ள சூரஜ்பூர் பகுதியில் தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர் மீது லாரி மோதியது.

    இதில் மோட்டார்சைக்கிளை ஓட்டிச் சென்ற மஹிந்தர் பலத்த காயமடைந்தார். அவரது பின்னால் அமர்ந்து சென்ற மகள் பூஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவர் கல்லூரி மாணவி ஆவார். இந்த மூன்று விபத்துகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai