மனநிலை பாதித்த "மைனர்' சிறுவன் பிளேடால் தாக்கியதில் 6 பேர் காயம்
By புது தில்லி, | Published on : 13th April 2014 12:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
வடகிழக்கு தில்லி பகுதியில் தெருவில் சென்றவர்களை மனநிலை பாதித்த 16 வயது "மைனர்' சிறுவன் தாக்கியதில் 6 பேர் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: வடகிழக்கு தில்லியின் ஜாஃபராபாத் பகுதியில் உள்ள மௌஜ்பூர் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு தெருவில் சென்ற மக்கள் மீது அப் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் பிளேடால் தாக்குவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்குப் புகார் வந்தது. இதையடுத்து, போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். பிளேடால் கீறியதால் தலை, கழுத்து, தோள்பட்டை உள்ளிட்ட பகுதிகளில் காயமடைந்த 6 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். பிளேடால் பொதுமக்களை கீறிய சிறுவன் மனநிலை பாதித்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் கூறினர்.