Enable Javscript for better performance
\\\"மனைவியின் சொத்து விவரங்களை மறைத்தார் கபில் சிபல்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "மனைவியின் சொத்து விவரங்களை மறைத்தார் கபில் சிபல்'

    By புது தில்லி  |   Published on : 13th April 2014 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ""மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் தனது மனைவிக்குச் சொந்தமான நிறுவனங்களைப் பற்றிய தகவல்களை வேண்டுமென்றே வேட்புமனுவில் தெரிவிக்கவில்லை'' என்று தேர்தல் ஆணையத்திடம் பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி புகார் கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து தேர்தல் ஆணையர் எச்.எஸ்.பிரம்மாவிடம் சனிக்கிழமை அவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:

    கபில் சிபல் தனது மனைவிக்குச் சொந்தமான 3 நிறுவனங்கள் பற்றிய விவரங்களை வேண்டுமென்றே வேட்புமனுவில் மறைத்துவிட்டார். வேட்புமனுவில் சொத்து விவரங்களை தெரிவிக்கத் தவறியது, குற்றவியல் சட்டத்தின்படி பொய்ச்சான்று அளிப்பதாகும்.

    எனவே, இதுதொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

    அவரது புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ள கபில் சிபல், ""வேட்பு மனுவில் குறிப்பிடாத சொத்துக்களை சுப்பிரமணியன் சுவாமி கண்டுபிடித்தால், அவற்றை அவருக்கே கொடுத்து விடுகிறேன்'' என்று கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai