Enable Javscript for better performance
முன்விரோதம்: கும்பல் சுட்டு தம்பி சாவு; அண்ணன் காயம்- Dinamani

சுடச்சுட

    

    முன்விரோதம்: கும்பல் சுட்டு தம்பி சாவு; அண்ணன் காயம்

    By புது தில்லி,  |   Published on : 13th April 2014 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முன்விரோதத்தில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் இறந்தார். அவரது அண்ணன் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து போலீஸ் உயரதிகாரி கூறியது: வடகிழக்கு தில்லி நந்த் நகரி பகுதியைச் சேர்ந்தவர் முகமது இம்ரான் (30). இவரது சகோதரர் முகமது கயாம் (25). இவர்கள் குடும்பத்துடன் நந்த் நகரி பகுதியில் வசித்து வந்தனர். இவர்களது குடும்பத்தினருக்கும், அண்டை வீட்டுக் குடும்பத்தினருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

    இந் நிலையில், வியாழக்கிழமை இரவு இரு குடும்பத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, முகமது கயாம் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அவருடன் சகோதரர் முகமது இம்ரானும் இருந்தார். அந்த சமயம், அங்கு ஆயுதங்களுடன் வந்த அடையாளம் தெரியாத சிலர் இருவர் மீதும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். துப்பாக்கி சப்தம் கேட்டதும், அக்கம்பக்கத்தினர் திரண்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் முகமது கயாம் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முகமது இம்ரான் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

    இது தொடர்பாக நந்த் நகரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீபக், விக்கி ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். இவர்களது கூட்டாளிகளையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டள்ளது. பக்கத்து வீட்டினருடன் ஏற்பட்ட முன்விரோதத்தில் இக் கொலை நிகழ்ந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று போலீஸ் உயரதிகாரி தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai