Enable Javscript for better performance
ரயில்வே வருவாய் ரூ.1,40,485 கோடியாக உயர்வு- Dinamani

சுடச்சுட

    

    2013-2014 நிதியாண்டில் இந்திய ரயில்வே துறை ரூ.1,40,485.02 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டைவிட (2012-2013) ரூ.18,653.37 கோடி அதிகமாகும். முந்தைய நிதியாண்டில் வருவாய் ரூ.1,21,831.65 கோடியாக இருந்தது.

    2013-14 நிதியாண்டில் ரயில்வேயின் மொத்த சரக்குக் கட்டண வருவாய் ரூ.94,925 கோடியாகும். இது முந்தைய நிதியாண்டில் ரூ.82,852 கோடியாக இருந்தது.

    இதேபோன்று, 2012-13 நிதியாண்டில் மொத்த பயணிகள் போக்குவரத்து வருவாய் ரூ. 31,896 கோடியாக இருந்தது. 2013-14 நிதியாண்டில் இந்த வருவாய்

    ரூ.37,478 ஆக உயர்ந்துள்ளது. பிற வருவாய் மூலம் 2013-14 நிதியாண்டில் தோராயமாக 38,818 கோடி ஈட்டப்பட்டுள்ளது. இது 2012-13 நிதியாண்டில் ரூ.31.37.92 கோடியாக இருந்தது.

    2013-14 நிதியாண்டில் ரயில்களில் தோராயமாக 8,535 மில்லியன் பயணிகள் பயணிக்கப் பதிவு செய்திருந்தனர். இது முந்தைய நிதியாண்டில் 8602.12 மில்லியன்களாக இருந்தது.

    புறநகர் மற்றும் புறநகர் அல்லாத பிரிவுகள் முறையே, 2013-14 நிதியாண்டில் 4,549.85 மில்லியன் மற்றும் 3,985.15 மில்லியன் என்ற அளவில் பயணிகள் பதிவு செய்திருந்தனர். இது 2012-13 நிதியாண்டில் 4,473.38 மில்லியன் மற்றும் 4,128.74 மில்லியனாக இருந்தது.

    2013-14 நிதியாண்டில் ரயில்வே துறை 1,053.54 மில்லியன் டன் சரக்குகளுக்கான வருவாயை ஈட்டியது. இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 43.68 மில்லியன் டன் அதிகமாகும். அதாவது 2012-13 நிதியாண்டில் 1,009.86 மில்லியன் டன்கள் மட்டுமே சரக்கு வருவாய் ஈட்டப்பட்டது.

    இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்திய ரயில்வே துறை மூலம் சரக்கு வருவாய் 100.49 மில்லியன் டன்களுக்கு ஈட்டப்பட்டது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஈட்டிய சரக்கு வருவாயை விட 2.15 மில்லியன் டன்கள் அதிகமாகும்.

    ரயில்வே துறையில் பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்து பிரிவுகள் மூலம் வருவாய் ஈட்டப்படுகிறது. உடனடி பயணச்சீட்டு, முன்பதிவு, சீசன் பயணச்சீட்டு மற்றும் தத்கல் போன்றவை பயணிகள் வருவாய் பிரிவில் வருவது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai