Enable Javscript for better performance
\\\"வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயல்கள் அதிகரிப்பு\\\'- Dinamani

சுடச்சுட

    

    "வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயல்கள் அதிகரிப்பு'

    By புது தில்லி  |   Published on : 13th April 2014 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் அரசின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாக அனைத்திந்திய விவசாயிகள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

    அகில இந்திய கிஸான் சபையின் 78-ஆம் ஆண்டு விழா தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் இணைச் செயலாளர் சுனித் சோப்ரா கொடியேற்றி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது: விவசாயிகள் மீது பல்வேறு வகையான தாக்குதல்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. விவசாய உற்பத்திப் பொருள்களின் விலை அதிகரிப்பு, ஊரகக் கடன்கள் கிடைக்காதது, விவசாய நிலங்களை ஆக்கிரமித்து தொழில் நிறுவனங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுவருகிறது. இதனால், பாதிக்கப்படும் விவசாயிகள் தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். ஆனால், இது குறித்து அரசு சரிவர நடவடிக்கைகளை எடுக்காததால், விவசாயிகளின் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அரசின் இதுபோன்ற செயல்பாடுகளால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். நம் முன்பு புதிய சவால்கள் தோன்றியுள்ளன. கடந்த காலங்களில் போராடியதைப் போல், அதே தீவிரத்துடன் அவற்றுக்கு எதிராகத் தொடர்ந்து நாம் போராட வேண்டும் என்றார் சுனித் சோப்ரா.

    இந் நிகழ்ச்சியில் சிஐடியு சார்பில் புஷ்பேந்திர தியாகி, அகில இந்திய மாதர் சங்கம் சார்பில் ஷரபானி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai