Enable Javscript for better performance
அடுத்த இரு ஆண்டுகளில் 10,000 ரயில் பெட்டிகளில் \\\"பயோ டாய்லெட்- Dinamani

சுடச்சுட

    

    அடுத்த இரு ஆண்டுகளில் 10,000 ரயில் பெட்டிகளில் "பயோ டாய்லெட்

    By 'புது தில்லி  |   Published on : 14th April 2014 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2016-ஆம் ஆண்டுக்குள் 10 ஆயிரம் ரயில் பெட்டிகளில் உயிரி கழிவறை அமைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.

    இதுகுறித்து பஞ்சாப் மாநிலம் கபூர்தலா ரயில் பெட்டித் தயாரிப்பு தொழிற்சாலை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரயில் பயணிகளுக்கு தூய்மையான, சுற்றுச் சூழலுக்கு உகந்த பயணத்தை அளிக்கும் வகையில், கடந்த மார்ச் மாதம் வரையிலும் ரயில்களில் 2096 "உயிரி கழிவறை'கள் (பயோ டாய்லெட்) பொருத்தப்பட்டுள்ளன.

    நாட்டில் ஆயிரக்கணக்கான ரயில் பெட்டிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. ஆனால், இவற்றில் உயிரி கழிவறையின் எண்ணிக்கை சொற்ப அளவில்தான் உள்ளன. இதையடுத்து, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத உயிரி கழிவறைகள் அமைக்க இந்திய ரயில்வே தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    பொதுவாக ரயில்களில் அமைக்கப்பட்டுள்ள கழிவறைகளில் இருந்து வெளியேறும் மனிதக் கழிவுகள் தண்டவாளங்களில் வெளியேற்றப்படும் நடைமுறை இருந்துவருகிறது. இதனால், அரிப்பு ஏற்பட்டும், துருப்பிடித்தும் தண்டவாளங்கள் பாதிக்கப்படுகின்றன. இதை தொடர்ந்து, தண்டவாளங்களை மாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளதால், ரயில்வேக்கு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.

    இந்த செலவை தவிர்க்க, ரயில் பெட்டிகளில் உயிரி கழிவறை வசதியை ஏற்படுத்த ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இதன்படி, 2016-ஆம் ஆண்டுக்குள் 10 ஆயிரம் ரயில் பெட்டிகளில் "உயிரி கழிவறை'களை அமைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இப்போது சாதாராண கழிவறைகள் உள்ள ரயில் பெட்டிகளில் "உயிரி கழிவறை'களை மாற்றி அமைக்கும் பணி பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவில் உள்ள ரயில் பெட்டித் தயாரிப்பு தொழிற்சாலையில் (ஆர்சிஎப்) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    உயிரி கழிவறை இயங்கும் விதம்: உயிரி கழிவறைகளில் கழிவுகள் ரயிலுக்கு அடியில் வைக்கப்படும் ஒரு தொட்டியில் சேகரிக்கப்படும். இத் தொட்டியில் ஒரு குறிப்பிட்ட வகை பாக்டீரியாக்கள் விடப்படும். இப் பாக்கடீரியாக்கள் கழிவுகளை வாயுவாகவும் தண்ணீராகவும் பிரித்துவிடும். தொட்டியில் தண்ணீர் நிறைந்துவிட்டால் ஒரு குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் ரயில் இயங்கும்போது அத் தொட்டி தானாகவே திறந்து தண்ணீர் வெளியேறிவிடும்.

    கபூர்தலாவில் உள்ள ரயில்பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் (ஆர்சிஎப்) நிகழாண்டில் மார்ச் வரையிலான காலத்தில் ரயில் பெட்டிகளில் மொத்தம் 2,096 உயிரி கழிவறைகள் பொருத்தப்பட்டுள்ளன. இம் முறையால் மனிதக் கழிவுகள் ரயில் தண்டவாளங்களில் விழாமல் தடுக்கப்படுகிறது. தூய்மையைப் பராமரிப்பதற்கு மட்டுமின்றி, ரயில் தண்டவாளத்தில் அரிப்பு ஏற்படாமல் இருப்பதற்கும் இது உதவுகிறது. மேலும், மனிதர்கள் மூலம் கழிவுகள் அகற்றுவதும் விரைவில் தடுக்கப்படும். துருப்பிடிக்கும் ரயில் தண்டவாளத்தை மாற்றுவதற்காக ரயில்வே துறைக்கு ஆண்டுக்கு ரூ. 350 கோடி செலவாகிறது

    பிரதான, எக்ஸ்பிரஸ், மெயில் ரயில்களின் ஏ.சி. பெட்டிகள் மற்றும் தூங்கும் வசதியுடைய பெட்டிகளில் உயிரி கழிவறைகள் பொருத்தப்பட்டுள்ளன. இக் கழிவறைகளை ரயில்வே துறையும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமும் (டிஆர்டிஓ) இணைந்து வடிவமைத்துள்ளன. இந்த வகை கழிவறைகள் அனைத்து ரயில் பெட்டிகளிலும் படிப்படியாகப் பொருத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

    ரயில் பெட்டி உற்பத்தியில் சாதனை: கபூர்தலா ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் 2013-14-ஆம் நிதியாண்டில் பிரதான ரயில்கள் மற்றும் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான பெட்டிகள் சுமார் 1,700 தயாரிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. மேலும், அதே நிதியாண்டு காலத்தில் 389 எல்எச்பி பெட்டிகள் உள்பட 1,701 பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

    இத் தொழிற்சாலையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட தயாரிப்புகளில் இதுதான் அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

    இந்த ரயில் பெட்டிகள் ராஜ்தானி, சதாப்தி, இரண்டடுக்கு ரயில்பெட்டி, மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயன்படுத்தப்பட்டுவருகின்றன என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai