Enable Javscript for better performance
அரசுக் கோப்புகளை சோனியா பார்வையிடவில்லை:பிரதமர் அலுவலகம் மறுப்பு- Dinamani

சுடச்சுட

    

    அரசுக் கோப்புகளை சோனியா பார்வையிடவில்லை:பிரதமர் அலுவலகம் மறுப்பு

    By புது தில்லி,  |   Published on : 14th April 2014 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிரதமர் அலுவலக கோப்புகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பார்வையிடவில்லை என்று பிரதமர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

    பிரதமர் மன்மோகன் சிங்கின் முன்னாள் ஆலோசகர் சஞ்சய பாருவின் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது, விஷமம் நிறைந்தது என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் பங்கஜ் பச்சௌரி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமர் அலுவலக கோப்புகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பார்வையிட்டதாக பிரதமரின் ஊடகத்துறை முன்னாள் ஆலோசகர் (சஞ்சய பாரு) குற்றம் சுமத்தியுள்ளார். இது அடிப்படை ஆதாரமற்றது, விஷமம் நிறைந்தது.

    பிரதமர் அலுவலக கோப்புகள் எதுவும் சோனியாவுக்கு காண்பிக்கப்படவில்லை. இதுதொடர்பான குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுக்கிறோம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் மன்மோகன் சிங்கின் முன்னாள் ஊடக ஆலோசகராக கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை இருந்தவர் சஞ்சய பாரு. அண்மையில் இவர் எழுதி வெளியாகியுள்ள புத்தகத்தில், பிரதமர் அலுவலகத்துக்கு வருவதற்கு முன்பே மத்திய அரசின் கோப்புகளை சோனியா காந்தி பார்வையிட்டதாகவும், அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு, அதிகாரிகள் இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகளை சோனியா காந்தியே எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai