Enable Javscript for better performance
ஆசிரியர்கள் மாநாட்டில் டிடிஇஏ பிரதிநிதிகள்- Dinamani

சுடச்சுட

    

    ஆசிரியர்கள் மாநாட்டில் டிடிஇஏ பிரதிநிதிகள்

    By புது தில்லி,  |   Published on : 14th April 2014 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி இண்டர்நேஷனல் சென்டரில் சனிக்கிழமை நடைபெற்ற "மாற்றங்களை உருவாக்கும் ஆசிரியர்கள்' என்ற தலைப்பிலான மாநாட்டில் தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தைச் (டிடிஇஏ) சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

    இம் மாநாட்டை "ஸ்டிர்' கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. டிடிஇஏ சார்பில் தலைவர் சூரிய நாராயணன், முதல்வர் கீதா அருணாசலம், டிடிஇஏ பள்ளி ஆசிரியர்கள் பத்மா கண்ணன், சுபத்ரா (மந்திர் மார்க்), ஏ.ஆர். சந்திரா, ராஜராஜேஸ்வரி (மோதிபாக்),  ராமசாமி, சுப்பிரமணி, நிஷா (பூசா ரோடு), டிடிஇஏ பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இந்துபாலா, விஜயா மற்றும் ராமகிருஷ்ணா பள்ளி ஆசிரியை கீதா ஸ்ரீதர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

     மேலும், இம் மாநாட்டில் உத்தர பிரதேச மாநில எஸ்சிஇஆர்டி இணை இயக்குநர் அஜய் குமார், தெற்கு தில்லி மாநகராட்சி கல்வித் துறை இயக்குநர் உதய் குமார், தெற்கு தில்லி மாநகராட்சி கல்விக் குழுத் தலைவர் சதீஷ் உபாத்யாய உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

     "சிறந்த புதிய கற்பித்தல் முறையை உருவாக்கும் ஆசியர்களுக்கு விருதுகள் வழங்க வேண்டும். மாநகராட்சிப் பள்ளிகளில் ஆசிரியர்களின் பணிச் சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று சதீஷ் உபாத்யாய தெரிவித்தார்.

    "ஸ்டிர்' கல்வி நிறுவனம், தற்போதைய சூழலில் மாணவர்களுக்குக் கற்பிப்பதில் ஆசியர்கள்   சந்திக்கும் சவால்கள், அவற்றை எதிர்கொள்ளும் முறைகள், புதிய கற்பித்தல் முறைகள் ஆகியவை குறித்து டிடிஇஏ ஆசிரியர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாகப் பயிற்சி அளிக்கப்பட்டு

    வருகிறது.

    இந் நிலையில் தில்லியில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டில் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆசிரியர்கள் பங்கேற்றனர் என்று டிடிஇஏ ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai