Enable Javscript for better performance
இனவெறி பேச்சு:இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    வடகிழக்கு மாநில மாணவருக்கு எதிராக இனவெறி ரீதியாக கருத்து தெரிவித்தாக இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

    வடக்கு தில்லி, தில்லி பல்கலைக்கழகம் அருகே உள்ள மௌரைஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமாங் ஹவோகிப் (25). வடகிழக்கு மாநிலத்தைப் பூர்விமாக கொண்ட இவர், கல்லூரி மாணவராவார். இவரது பக்கத்து வீட்டில் பிகார் மாநிலம், சாப்ரா மாவட்டத்தைச் சேர்ந்த அமித் குமார் (22), ஆகாஷ் குமார் (23) ஆகியோர் வசித்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று இரவு இருவரும், ஹேமங் ஹவோகிப்பிற்கு எதிரான இனவெறி ரீதியாக கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து ஹேமாங் ஹவோகிப் அளித்த புகாரின் பேரில் அமித் குமார், ஆகாஷ் குமார் ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். இருவரிடமும் விசாரணை நடைபெற்றுவருவதாக போலீஸார் கூறினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai