Enable Javscript for better performance
செகந்தராபாத் - புது தில்லி சிறப்பு ரயில்- Dinamani

சுடச்சுட

    

    ஆந்திர மாநிலம், செகந்தராபாதிலிருந்து தில்லிக்கு ஏப்ரல் 25-ஆம் தேதி சிறப்பு ரயில் (பிரீமியம்) இயக்கப்படவுள்ளது. கோடைக்கால விடுமுறையை கருத்தில் கொண்டு கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக இந் நடவடிக்கையை தென்-மத்திய ரயில்வே எடுத்துள்ளது.

    செகந்தராபாத்-புது தில்லி சிறப்பு ரயில் (எண்:02723) செகந்தராபாதிலிருந்து ஏப்ரல் 25-ஆம் தேதி காலை 10.10 மணிக்குப் புறப்பட்டு அடுத்த நாள் பிற்பகல் 1.10-க்கு புது தில்லி வந்து சேரும்.

     இதே போல் மறு மார்க்கத்தில் புது தில்லி-செகந்தராபாத் சிறப்பு ரயில் (எண்:02724) புது தில்லியில் இருந்து ஏப்ரல் 26-ஆம் தேதி இரவு 7.05-க்குப் புறப்பட்டு செகந்தராபாதுக்கு அடுத்த நாள் இரவு

    10.05-க்குப் போய்ச் சேரும்.

    இந்த ரயில் ராமகுண்டம், நாக்பூர், போபால், ஜான்சி, ஆக்ரா ஆகிய ஐந்து ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும். மற்ற ரயில் நிலையங்களில் நிற்காது.

     இதில் பயணம் செய்வதற்கு ஐஆர்சிடிசி இணையதளத்தின் மூலமே முன்பதிவு செய்ய முடியும். இருப்பினும் சார்ட் வெளியிடப்பட்ட பிறகு படுக்கைவசதி கொண்ட இடங்கள் இருக்கும்பட்சத்தில், அன்றைய தினத்தில் ரயில் நிலையங்களில் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று தென்-மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai