Enable Javscript for better performance
தலைநகரில் இதமான வானிலை- Dinamani

சுடச்சுட

    

    : தில்லியில் ஞாயிற்றுக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் இதமான வானிலை நீடித்தது. இதனால், கடந்த சில நாள்களாக நீடித்துவந்த வெப்பத்தின் தாக்கம் குறைந்தது.

    தலைநகர் பகுதியில் கடந்த ஒரு வார காலமாகவே முன்வேனில் காலம் போன்ற வானிலை நிலவிவந்தது.  வெப்பத்தின் காரணமாக, அலுவலகம் செல்வோரும் கல்வி நிலையங்களுக்குச் செல்லும் மாணவ மாணவிகளும் அவதிக்குள்ளாகிவந்தனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மேகமூட்டம் காரணமாக, வெப்பம் சற்றே குறைந்தது.

     ஞாயிற்றுக்கிழமை வெப்பநிலை அதிகபட்சம் 33.3 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 24 டிகிரி செல்சியஸ் பதிவாகியது. காற்றில் ஈரப்பதம் 38 முதல் 55 சதவீதம் வரை இருந்தது. திங்கள்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று   இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

     காலையிலிருந்து மிதமான வெப்பம் இருந்து வந்ததால், மாலை வேளையில் தலைநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பூங்காக்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai