Enable Javscript for better performance
\\\"மருத்துவர்களும் உறுப்பு தானம் செய்ய முன் வர வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    "மருத்துவர்களும் உறுப்பு தானம் செய்ய முன் வர வேண்டும்

    By 'புது தில்லி,  |   Published on : 14th April 2014 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உறுப்பு தானம் தொடர்பாக பிறரை வலியுறுத்திவரும் மருத்துவர்களும் உறுப்பு தானம் செய்ய முன் வர வேண்டும் என்று எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.

    எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் "இன்பெஸ்ட்' ஆண்டு கலாசார நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் மருத்துவ மாணவர்கள்  நூற்றுக்கும் அதிகமானோர் "உறுப்பு தானம்' தொடர்பான உறுதிமொழியை எடுத்துக்

    கொண்டனர்.

    இந் நிகழ்ச்சியில் எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் எம்.சி. மிஸ்ரா பேசுகையில்,  "உறுப்பு தானம், ரத்த தானம் ஆகியன அவசியமாகிறது. நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 1 லட்சம் பேர் சிறுநீரக நோயால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் சுமார் 4 ஆயிரம் பேருக்கு மட்டுமே உறுப்பு தானம் மூலம் மாற்றுச் சீறுநீரகம் பொருத்த

    முடிகிறது.

    இது போன்று உறுப்புகள் செயலிழந்த நோயாளிக்கு போதுமான உறுப்புகள் கிடைப்பதில்லை. இதன் காரணமாக பல நோயாளிகள் இறக்க நேரிடுகிறது. இது போன்ற சூழலில், மருத்துவத் துறையில் உறுப்பு தானம் செய்வது உன்னதமான பணி' என்றார்.

     "உறுப்பு தான வங்கி' அமைப்பின் அமைப்பாளரும், அறுவை சிகிச்சை நிபுணருமான ராஜீவ் மகூரி பேசுகையில், "உறுப்புகள் தேவைக்கும், உறுப்புகள் தானத்துக்கும் இடையே உள்ள இடைவெளியை இணைக்கும் வகையில் உறுப்பு தான விழிப்புணர்வு அவசியமாகிறது. உறுப்புகளைத் தானம் செய்ய பிறரை வலியுறுத்தும் மருத்துவர்களும், உறுப்பு தானம் செய்ய முன் வர வேண்டும். இதற்காக, மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உறுதி மொழி ஏற்க வேண்டும்' என்றார்.

    மூளைச் சாவு ஏற்பட்டவர்கள், இறந்தவர்கள் ஆகியோரிடமிருந்து உறுப்புகள் தானமாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அவ்வாறு பெறப்படும் உறுப்புகள் தேவையான நோயாளிகளுக்குப் பொருத்தப்படுகின்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai