Enable Javscript for better performance
மருமகள் பலாத்காரம்:மாமனார் கைது- Dinamani

சுடச்சுட

    

    மருமகளைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக மாமனாரை போலீஸார் கைது செய்தனர்.

    இதுகுறித்து தில்லி போலீஸார் கூறியதாவது: பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது பெண் தில்லியில் தனது கணவருடன் சுல்தான்புரி காவல் சரகப் பகுதியில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று கணவர் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், வீட்டில் தனியாக இருந்தார் அப்பெண். அப்போது, அவரது 52 வயது மாமானார் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. மாலையில் வீடு திரும்பிய கணவரிடம் நடந்த சம்பவத்தை அப் பெண் கூறினார். இதையடுத்து, போலீஸில் தம்பதியினர் புகார் அளித்தனர். மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டதில் அப் பெண் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமானார் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

    மற்றொரு சம்பவம்: தில்லி நாங்லாய் பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ். இவருக்கும் பக்கத்து கிராமத்தில் வசிக்கும் உத்தர பிரதேச மாநிலம், ஷஹரன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது பெண்ணுக்கும் பழக்கம் இருந்து வந்தது.

    இந் நிலையில், அப்பெண்ணைத் திருமணம் செய்வதாகக் கூறி நரேஷ் பாலியல் உறவு கொண்டதாகக் கூறப்படுகிறது. இந் நிலையில், அண்மைக் காலமாக அப் பெண்ணை சந்திப்பதை நரேஷ் தவிர்த்தார். இதையடுத்து, தன்னைத் திருமணம் செய்வதாக ஏமாற்றி நரேஷ் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக நாங்லாய் போலீஸில் அப் பெண் புகார் அளித்தார். இதையடுத்து, நரேஷ் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக    போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai