Enable Javscript for better performance
ராணுவ ஆள் சேர்க்கும் கொள்கை உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு- Dinamani

சுடச்சுட

    

    ராணுவ ஆள் சேர்க்கும் கொள்கை உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு

    By புது தில்லி  |   Published on : 14th April 2014 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் கொள்கை தொடர்பாக ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக ஓய்வுபெற்ற மருத்துவர் ஐ.எஸ். யாதவ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "ராணுவத்துக்கு மதம், பிராந்தியம், ஜாதி அடிப்படையில் ஆள்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதுபோல் குறிப்பிட்ட பிரிவினர் ராணுவத்தில் சேர்க்கப்படுவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது ஆகும்.

    இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு மீதான விசாரணையின்போது அளிக்கப்பட்ட பதிலில் ஜாதி, மதம் மற்றும் பிராந்திய அடிப்படையில் ஆள்கள் தேர்வு செய்யப்படுவதை ராணுவம் கிட்டத்தட்ட ஒப்புக் கொண்டது.

    ஆனால் இதனை கவனத்தில் கொள்ளாமல், வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. எனவே தனது தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடரப்பட்ட பொது நல வழக்கில், இந்திய ராணுவத்தில் சீக்கியர்கள், மராத்தியர்கள், ஜாட், ராஜ்புதனா, கோர்க்கா உள்ளிட்ட பல்வேறு பெயர்களின் கீழ் படைப்பிரிவுகள் இருப்பதாகவும், அதில் சம்பந்தப்பட்ட பிரிவினர் அல்லது பிராந்தியத்தைச் சேர்ந்தவர்களே சேர்க்கப்படுகின்றனர் என்றும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

    இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராணுவ விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று கூறி கடந்த பிப்ரவரி மாதம் அந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai