Enable Javscript for better performance
வெங்கடேஸ்வரா மந்திர்பொன்விழா மலர் வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    வெங்கடேஸ்வரா மந்திர்பொன்விழா மலர் வெளியீடு

    By புது தில்லி,  |   Published on : 14th April 2014 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புது தில்லி, ராமகிருஷ்ணாபுரம் செக்டர் 3-இல் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மந்திர் சொஸைட்டியின் பொன் விழா ஆண்டு மலர் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

     கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொன்விழா மலர் மற்றும் தகவல் கையேட்டை சொசைட்டி தலைவரும் ஸ்தாபகர்களில் ஒருவருமான ஆர்.வி. ராஜகோபாலன் வெளியிட்டார். விழாவுக்கு பிருஹஸ்பதி ஸ்ரீதராச்சாரியார் தலைமை வகித்தார். இந்த விழாவில் கோயில் வளர்ச்சிக்கு காரணமாயிருந்த தில்லியிலுள்ள சொஸைட்டி ஸ்தாபகர்களின் குடும்பத்தினர், உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், அனைத்து அர்ச்சகர்கள், அலுவலர்கள் மற்றும் நன்கொடையாளர்கள், பக்தர்கள் ஆகியோர் கெüரவிக்கப்பட்டனர்.

     விழாவில் தில்லி தமிழ்ச் சங்கப் பொதுச் செயலாளர் இரா. முகுந்தன், முத்தமிழ்ப் பேரவைச் செயலாளர் என். கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai