Enable Javscript for better performance
அரசு அதிகாரி வீட்டில் ரூ. 20 லட்சம் நகை திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    அரசு அதிகாரி வீட்டில் ரூ. 20 லட்சம் நகை திருட்டு

    By புது தில்லி  |   Published on : 15th April 2014 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் பொதுப் பணித் துறை அதிகாரி வீட்டில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், ரொக்கம் ரூ. 1.50 லட்சம் திருட்டுப் போயின.

    தெற்கு தில்லி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த இச் சம்பவம் குறித்து போலீஸார் கூறியது: தெற்கு தில்லி, மாள்வியா நகரில் "எம்' பிளாக்கில் வசிப்பவர் சுனில் சாமுவேல். மத்திய பொதுப் பணித் துறையில் நிர்வாகப் பிரிவில் அதிகாரியாக உள்ளார்.

    அவர் குடும்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் தெற்கு தில்லியில் உள்ள வசந்த் குஞ்ஜ் பகுதியில் உள்ள தேவலாயத்துக்குச் சென்றிருந்தார். வீட்டில் யாரும் இல்லை.

    பின்னர் பிற்பகல் 1.30 மணியளவில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் பிரதான கதவு திறந்து கிடந்தது. வீட்டினுள் பொருள்கள் சிதறிக் கிடந்தன. உள்ளே சென்று பார்த்த போது ரொக்கப் பணம், நகைககள் திருட்டுப் போனது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸில் புகார் அளித்தார். ரொக்கம் ரூ. 1.50 லட்சம், ரூ. 20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் உள்ளிட்டவை திருட்டுப் போனதாக புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.

    போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். தனது சகோதரியின் மகள் திருமணம் மே 1-ஆம் நடைபெறவுள்ளது. அதையொட்டி திருமணத்துக்காக அந்த நகைகளை வாங்கி வைத்திருந்ததாக விசாரணையின்போது சுனில் சாமுவேல் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai