Enable Javscript for better performance
எம்.எஃப்.ஹுசைன் வரைந்த ஓவியம் ரூ. 1.6 கோடிக்கு ஏலம்- Dinamani

சுடச்சுட

    

    எம்.எஃப்.ஹுசைன் வரைந்த ஓவியம் ரூ. 1.6 கோடிக்கு ஏலம்

    By புது தில்லி,  |   Published on : 15th April 2014 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    : பிரபல ஓவியர் எம்.எஃப். ஹுசைன் வரைந்த "அன்னை தெரசா' ஓவியம் தில்லியில் ரூ. 1.6 கோடிக்கு திங்கள்கிழமை ஏலம் போனது.

    இந்தியாவில் உள்ள ஏழை, ஆதரவற்றோர்களுக்கு உதவும் வகையில், தில்லி கலைக்கூடம் மற்றும் குஷி தொண்டு நிறுவனம் ஆகியவை சார்பில் பிரபல ஓவியர்கள் வரைந்த ஓவியங்கள், கலைச்சிற்பங்கள் உள்ளிட்டவை திங்கள்கிழமை ஏலம் விடப்பட்டன.

    இதில் எம்.எஃப். ஹுசைன் வரைந்திருந்த அன்னை தெரசா ஓவியம் ரூ. 1.6 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டது. அந்த ஓவியத்தை வாங்க கலை ஆர்வலர்களிடையே கடும் போட்டி நிலவியது.

    இதேபோல் ஓவியர் அக்பர் பதம்ஸி, கொல்கத்தாவைச் சேர்ந்த பிகாஸ் பட்டாச்சாரியா வரைந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் ரூ. 35 லட்சத்துக்கு ஏலம் போனது.

    இது குறித்து தில்லி கலைக்கூட இயக்குநர் ஆசிஷ் ஆனந்த் கூறுகையில், "ஏலத்தின் மூலமாக மொத்தம் ரூ. 5 கோடி திரட்டப்பட்டது.

    இந்த ஏலம், கலை ஆர்வலர்களின் பெருந்தன்மையான இதயத்தை எடுத்துக் காட்டுகிறது. வரவுள்ள தொண்டு நிறுவன ஏலங்களிலும் இதே அளவிலான ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறோம்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai