Enable Javscript for better performance
தில்லியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா- Dinamani

சுடச்சுட

    

    தில்லி சட்டப்பேரவை வளாகத்தில் அம்பேத்கரின் 123-ஆவது பிறந்த நாள் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

    இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் தந்தையான டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் தில்லி சட்டப்பேரவை, பழைய தலைமைச் செயலக வளாகத்தில் கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி, பேரவை வளாகத்தில் உள்ள பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் முழு உருவச் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    இந் நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் மகேந்தர் சிங் தீர், முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சாஹிப் சிங் செüகான், மனோஜ் குமார், குகன் சிங், தர்மேந்தர் கோலி, தில்லி பிரதேச அரசின் தலைமைச் செயலாளர் எஸ்.கே. ஸ்ரீவாஸ்தவா, சுற்றுச்சூழல், மக்கள் தொடர்புத் துறை செயலாளர் சஞ்சீவ் குமார், தில்லி பிரதேச உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டு அம்பேத்கரின் முழு உருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    இந் நிகழ்ச்சியையொட்டி, கந்தர்வ மகா வித்யாலயா கலைஞர்களின் பக்திப் பாடல்கள் இசை நிகழ்ச்சி நடைபெற்றது என்று தில்லி அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai