Enable Javscript for better performance
தேர்தலுக்குப் பிறகுதான் எங்கள் மீது உண்மையான தாக்குதல் இருக்கும்- Dinamani

சுடச்சுட

    

    தேர்தலுக்குப் பிறகுதான் எங்கள் மீது உண்மையான தாக்குதல் இருக்கும்

    By புது தில்லி,  |   Published on : 15th April 2014 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைத் தேர்தலுக்குப் பிறகுதான் எனது கட்சியினர் மீதான உண்மையான தாக்குதலை எதிர்பார்க்கிறேன் என்று ஆம்ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கூறினார்.

    ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த திலீப் பாண்டே, சஞ்சல் சர்மா ஆகியோர் எழுதிய "தேர்லீஜ் பர் தில்' எனும் நூல் வெளியீட்டு விழா தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

    ஊழலுக்கு எதிரான இயக்கம், பாண்டே, கேஜரிவால் ஆகியோரை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள இந்த நூலை வெளியிட்டு கேஜரிவால் பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில், "மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது முட்டை வீச்சு, அடி உதை, கன்னத்தில் அறைந்தது போன்ற தாக்குதல் சம்பவங்களை நானும் என்னைச் சேர்ந்த சிலரும் எதிர்கொள்ள நேரிட்டது.

    தேர்தல்கள் முடியும் வரை இவை தவிர வேறு ஏதும் நடைபெறாது என்று நான் கருதுகிறேன். ஆனால், உண்மையான தாக்குதல்கள் தேர்தலுக்குப் பிறகுதான் இருக்கும்.

    தேர்தலுக்குப் பிறகு அவர்கள் எங்களை சும்மா விடமாட்டார்கள். நாங்கள் உண்மையின் பாதையில் நடந்து சென்று கொண்டிருக்கிறோம். அதையே பின்பற்ற விரும்புகிறோம்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai