Enable Javscript for better performance
நகைக் கடையில் புகுந்த கொள்ளையர்களை சாதுர்யப் பேச்சால் விரட்டிய விற்பனைப் பெண்- Dinamani

சுடச்சுட

    

    நகைக் கடையில் புகுந்த கொள்ளையர்களை சாதுர்யப் பேச்சால் விரட்டிய விற்பனைப் பெண்

    By புது தில்லி,  |   Published on : 15th April 2014 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில், நகைக் கடைக்குள் புகுந்த கொள்ளையர்களை தனது சாதுர்யமான பேச்சால் அச்சுறுத்தி விரட்டினார் கடையின் விற்பனைப் பெண்.

    இதுகுறித்த விவரம் வருமாறு: தெற்கு தில்லி மஹிபல்பூரில் நகைக் கடை நடத்தி வருபவர் ஹரி ஓம். இவரது கடைக்கு கடந்த வெள்ளிக்கிழமை பட்டப்பகலில் 5 பேர் கொண்ட கொள்ளையர்கள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்தனர். ஹரிஓமின் நெற்றியில் துப்பாக்கியை வைத்தவாறு கடையில் உள்ள நகைகளை தருமாறு அங்கு பணியில் இருந்த ஊழியர்களை மிரட்டினர். இதனால், ஊழியர்கள் பதற்றத்தில் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

    அப்போது, கடையில் இருந்த விற்பனைப் பெண் சில்பி தைரியமாக கொள்ளையர்களிடம் பேசினார். "நீங்கள் கடையில் கொள்ளையடிப்பது குறித்து போலீஸாருக்கு தொலைபேசி வழியாக ஓசைப்படாமல் தகவல் தெரிவித்துவிட்டேன். அவர்கள் இந் நேரம் இப் பகுதியைச் சுற்றி வளைத்திருப்பார்கள். நீங்கள் தப்ப முடியாது' என்றார். இதையடுத்து, பயந்து போன கொள்ளையர்கள் ஹரி ஓமை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பினர். ஆனால், உண்மையில் அதுபோன்று போலீஸாருக்கு தான் ஏதும் தெரிவிக்கவில்லை என்று கடை உரிமையாளரிடம் அப் பெண் கூறினார். அதன் பிறகு,

    அருகில் இருந்த காவல் கட்டுப்பாட்டு அறை போலீஸாருக்கு கடை உரிமையாளர் தகவல் தெரிவித்தார். போலீஸார் சம்பவம் நடந்த கடையில் விசாரணை நடத்தினர். கடையில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிப் பதிவு மூலம் கொள்ளையர்களைப் பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai