Enable Javscript for better performance
பரேக் குற்றச்சாட்டு பிரதமருக்கு காங்கிரஸ் ஆதரவு- Dinamani

சுடச்சுட

    

    பரேக் குற்றச்சாட்டு பிரதமருக்கு காங்கிரஸ் ஆதரவு

    By புது தில்லி,  |   Published on : 15th April 2014 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிரதமர் மன்மோகன் சிங் நடவடிக்கை எடுத்திருந்தால் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற ஊழலை தவிர்த்திருக்கலாம் என்று நிலக்கரித்துறை அமைச்சக முன்னாள் செயலர் பி.சி. பரேக் குற்றச்சாட்டு தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

    தில்லியில் இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் பேசுகையில், "நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்யும் முறையில், பிரதமர் மன்மோகன் சிங் மிகவும் வெளிப்படையாக நடந்து கொண்டார். அவரது வெளிப்படையான நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஒடிஸா, மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

    நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்யும் முறையை ஒழுங்குப்படுத்தியது மற்றும் வெளிப்படையாக்கிய பெருமை பிரதமர் மன்மோகன் சிங்கையே சேரும்.

    நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு விவகாரம் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தால் கண்காணிக்கப்படுகிறது. எனவே மேற்கொண்டு இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்க இயலாது.

    பி.சி. பரேக் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தபோது, அது சரியான நடவடிக்கை அல்ல என்று பிரதமர் மன்மோகன் சிங் சுட்டிக்காட்டினார். பரேக் புத்தகம் குறித்து தற்போது கருத்து தெரிவிக்க இயலாது. அதனை முழுவதும் படித்த பார்த்தபிறகே கருத்து தெரிவிக்க முடியும்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai