Enable Javscript for better performance
பலவீனமான பிரதமர் வாஜ்பாய்:காங்கிரஸ் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    பலவீனமான பிரதமர் வாஜ்பாய்:காங்கிரஸ் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம்

    By புது தில்லி,  |   Published on : 15th April 2014 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாஜக மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாய், இந்திய வரலாற்றிலேயே பலவீனமான பிரதமர்' என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

    சில நாள்களுக்கு முன்பு பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியை விமர்சிப்பதற்காக, அக்கட்சியின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை புகழ்ந்து கருத்து வெளியிட்டிருந்த காங்கிரஸ் கட்சி தற்போது திடீரென்று தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது.

    பிரதமர் மன்மோகன் சிங்கை பலவீனமான பிரதமர் என்று பாஜக குற்றம்சாட்டி வருவதைப் போல், தற்போது காங்கிரஸ் கட்சி, வாஜ்பாய் மீது இதே குற்றச்சாட்டை சுமத்தத் தொடங்கியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ஜா, டுவிட்டரில் செய்துள்ள பதிவில், "தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலத்தில், இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பிரச்னை ஏற்பட்டபோது, நாட்டின் நலனை பாதுகாப்பதில் வாஜ்பாய் தோல்வி அடைந்துவிட்டார். கார்கில் போரில் இந்திய ராணுவப் படையினர் உயிரிழந்த பின்பும், அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெஃரீபுடன் வாஜ்பாய் கைகுலுக்கினார்.

    இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பிரச்னை உச்சக்கட்டத்தில் இருந்த போதிலும், வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் முஷாரஃப் இந்தியாவில் தங்கினார்.

    2002ஆம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் கலவரம் தொடர்பாக அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடியை பதவியில் இருந்து நீக்குவதில் வாஜ்பாய் தோல்வி அடைந்துவிட்டார்.

    இந்த விவகாரத்தில் பாஜகவின் நிர்பந்தத்துக்கு அவர் அடிபணிந்துவிட்டார். இதனால் இந்திய வரலாற்றில் ஆட்சி செய்த பிரதமர்களில் வாஜ்பாய் பலவீனமானவர்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் இணையதளத்தில் மோடி குறித்து வெளியிடப்பட்டிருந்த கட்டுரையில், "பாஜகவின் மூத்த தலைவர் வாஜ்பாய்க்கு இணையாக அக்கட்சியில் வேறு எந்தத் தலைவரையும் ஒப்பிட முடியாது' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai