Enable Javscript for better performance
பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை - Dinamani

சுடச்சுட

    

    பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை

    By புது தில்லி,  |   Published on : 15th April 2014 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொய் வழக்கு தொடுத்ததாக பெண் ஒப்புக்கொண்டதையடுத்து, பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரை தில்லி விரைவு நீதிமன்றம் திங்கள்கிழமை விடுதலை செய்து உத்தரவிட்டது.

    திருமணம் செய்துகொள்வதாக கூறி, ஏமாற்றி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர், தில்லியைச் சேர்ந்த சச்சின் குமார் தாகர் என்பவர் மீது புகார் அளித்தார்.

    இதையடுத்து, பாலியல் பலாத்காரம், மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சச்சின் குமாரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு தில்லி விரைவு நீதிமன்றத்தில் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி நிவேதிதா அனில் சர்மா முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. சச்சின் குமார் தாகர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் வாதிடுகையில், "கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சச்சின் குமாரை, அப் பெண்ணுக்குத் தெரியும். அப்போது முதல் இருவரும் நட்புடன் பழகி வந்தனர். அதன்பின் நவம்பர் 2013-ஆம் ஆண்டு வரை அவர்களுக்குள் நெருக்கமான உறவு இருந்துவந்தது. அப்போது, சச்சின் குமார் அப் பெண்ணை நிச்சயம் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதியும் அளித்தார்.

    ஆனால், போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், விருப்பமின்றி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்' என்று வழக்குரைஞர் வாதிட்டார். அதன்பின் அப் பெண்ணிடம் நடத்தப்பட்ட குறுக்கு விசாரணையில், முன்விரோதம் காரணமாக சச்சின் குமார் மீது பொய் வழக்கு தொடர்ந்ததாக ஒப்புக் கொண்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, முன்விரோதம் காரணமாக குற்றம்சாட்டப்பட்டவர் மீது பொய் வழக்கு தொடர்ந்ததாக அப் பெண் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கோ, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கோ எந்த ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. எனவே, குற்றம்சாட்டப்பட்டவரை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai