Enable Javscript for better performance
பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் 3 சடலங்கள்- Dinamani

சுடச்சுட

    

    பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் 3 சடலங்கள்

    By புது தில்லி  |   Published on : 15th April 2014 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய தலைநகர் வலயம், காஜியாபாத் பகுதியில் பூட்டிய வீட்டில் பெற்றோர் மற்றும் அவர்களது 14 வயது சிறுமியின் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது குறித்து காஜியாபாத் போலீஸார் திங்கள்கிழமை கூறியதாவது: காஜியாபாத் லோனி ஏரியா பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் சர்மா (48). இவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து, போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அப்போது, சஞ்சய் சர்மாவின் வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கதவை உடைத்து உள்ள சென்றபோது, சஞ்சய் சர்மா, அவரது மனைவி ரேகா (45), மகள் குஷ்பு (14) ஆகியோர் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தனர்.

    வீட்டில் இருந்த பொருள்கள், ரேகா அணிந்திருந்த நகைகள் ஏதும் திருடப்படவில்லை. முதல்கட்ட விசாரணையில் மூவரும் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. மூவரும் இறந்து ஒரு வாரம் ஆனதால் உடல் அழுகி துர்நாற்றம் வீசியதும் தெரிய வந்தது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மூவரின் உடல் பரிசோதனைக்குப் பிறகே அவர்கள் எப்படி இறந்துள்ளார்கள் என்ற விவரம் தெரியவரும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai