Enable Javscript for better performance
மனைவியை சுட்டுக் கொன்ற கணவருக்கு வலைவீச்சு- Dinamani

சுடச்சுட

    

    மனைவியை சுட்டுக் கொன்ற கணவருக்கு வலைவீச்சு

    By புது தில்லி,  |   Published on : 15th April 2014 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக மனைவியை சுட்டுக் கொன்ற கணவரையும், அவரது நண்பரையும் மசூரி போலீஸார் தேடி வருகின்றனர்.

    இதுகுறித்து காஜியாபாத் மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேசியத் தலைநகர் வலயம், காஜியாபாத் அருகே உள்ள மசூரி பகுதியைச் சேர்ந்தவர் ரஹிசுதீன் (49). இவரது மனைவி சபானா (45). இவர்களுக்கு ஆமிர் என்ற மகன் உள்ளார். ரஹிசுதீனின் நண்பர் முன்சீத். இவர் ரஹிசுதீனின் வீட்டுக்கு அடிக்கடி வந்தார். அப்போது, சபானாவுக்கும் முன்சீத்தும் பழக்கம் ஏற்பட்டது. இதை விரும்பாத ரஹிசுதீன், சபானாவை கண்டித்தார். இதையடுத்து, முன்சீத்தை சந்திப்பதை சபானா தவிர்த்து வந்தார்.இந் நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு சபானாவுக்கும், ரஹிசுதீனுக்கும் இடையே இது தொடர்பாக வாய்த் தகராறு ஏற்பட்டது. அப்போது, முன்சீத்தும் வீட்டில் இருந்தார்.

    இந் நிலையில், ஆத்திரத்தில் தனது மனைவியை ரஹிசுதீன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. முன்சீத்தும் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இது குறித்து சபானாவின் மகன் ஆமிர் அளித்த புகாரின் பேரில் மசூரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் தேடி வருகிறோம் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai