Enable Javscript for better performance
மோடி அப்பட்டமான பொய் குற்றச்சாட்டை பரப்புகிறார்: ஜெய்ராம் ரமேஷ்- Dinamani

சுடச்சுட

    

    மோடி அப்பட்டமான பொய் குற்றச்சாட்டை பரப்புகிறார்: ஜெய்ராம் ரமேஷ்

    By புது தில்லி  |   Published on : 15th April 2014 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நரேந்திர மோடி அப்பட்டமான பொய்க்குற்றச்சாட்டை பரப்பி வருகிறார் என்று மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர், பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடிக்கு திங்கள்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

    சிக்கமகளூர் கூட்டத்தில் கடந்த 13ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தாங்கள் பேசியபோது, "குப்பைகள் மற்றும் சோம்பேறிகள் நிறைந்த நாடு இந்தியா' என்று எனது (ஜெய்ராம் ரமேஷ்) வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தின்போது நான் கூறியதாக குறிப்பிட்டுள்ளீர்கள்.

    இதுபோன்ற மூர்க்கத்தனமான கருத்துக்களை நீங்கள் வெளியிடுவீர்கள் என்பதை அறிவேன். எனினும், உங்கள் தகுதிக்கு என் மீது நீங்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு அப்பட்டமான பொய். நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல் நான் ஒரு போதும் கூறியதில்லை.

    இந்த விஷயத்தில் தவறான குற்றச்சாட்டை என் மீது சுமத்தியுள்ளது தெளிவாகத் தெரிகிறது. இதன் மூலம் உண்மையை பேச இயலாதவராக உங்களை கருத வேண்டியுள்ளது. நாட்டின் துப்புரவு தொடர்பான எனது கருத்தில் உறுதியாக இருக்கிறேன்.

    ஒரு நாட்டில் வளர்ச்சி ஏற்பட வேண்டுமெனில் ஆன்மிகம் மட்டும் இருந்தால் போதாது; சுகாதாரத்திலும் உயர்வடைய வேண்டும் என்று நான் கூறிய கருத்துகளை நீங்கள் ஆமோதித்திருந்தீர்கள்.

    சிகக்மகளூர் மாவட்டத்தில் உற்பத்தியாகும் காபி விற்பனையை மேம்படுத்தும் வகையில், உலக அளவில் அதன் விற்பனையை ஊக்குவிக்குமாறு நீங்கள் பரிந்துரை செய்தும் நான் செய்து கொடுக்கவில்லை என்று கூறியிருக்கிறீர்கள். இதுவும் பொய்யான குற்றச்சாட்டு. இது தொடர்பாக நான் உங்களிடம் இருந்து எவ்வித பரிந்துரையையும் பெறவில்லை என்று அந்தக் கடிதத்தில் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai