Enable Javscript for better performance
வாராணசி, அமேதி தொகுதி ஆம்ஆத்மி வேட்பாளர்களுக்காக நூதன பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    வாராணசி, அமேதி தொகுதி ஆம்ஆத்மி வேட்பாளர்களுக்காக நூதன பிரசாரம்

    By புது தில்லி,  |   Published on : 15th April 2014 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தர பிரதேச மாநிலம், வாராணசி, அமேதி ஆகிய மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் ஆம்ஆத்மி கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் வகையில் அக் கட்சியின் சார்பில் "குடிமக்கள் அழைப்பு பிரசாரம்' எனும் உயர் தொழில்நுட் முறையிலான கட்டணமில்லா தொலைபேசி வழி பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அக் கட்சித் தலைவர் ஒருவர் கூறியதாவது:

    நாடு முழுவதும் உள்ள ஆம்ஆத்மியின் தொண்டர்கள், பொதுமக்கள் உத்தர பிரதேசத்தில் உள்ள வாராணசி, அமேதி மக்களவைத் தொகுதி வாக்காளர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆம்ஆத்மி கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக "குடிமக்கள் அழைப்பு பிரசாரம்' என்ற வசதி தொடங்கப்பட்டுள்ளது.

    இரு தொகுதிகளிலும் உள்ள வாக்காளரை நேரடியாக தொலைபேசி வழியாகத் தொடர்பு கொள்வதற்கு வசதியாக கட்டணமில்லா தொலைபேசி எண்களும் கட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ளன.

    இதன்படி, இரு தொகுதிகளிலும் உள்ள வாக்காளர்களை ஆம்ஆத்மி கட்சியின் ஆதரவாளர்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம். அப்போது அவர்கள் தில்லியில் ஆம்ஆத்மி ஆட்சியில் இருந்தபோது மேற்கொண்ட சாதனைகள் குறித்து வாக்காளர்களுக்கு எடுத்துரைப்பர். மேலும், முதல்வர் பதவியை கேஜரிவால் அவசரகோலத்தில் ராஜிநாமா செய்ததாக எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கும் உரிய பதிலை அளிப்பார்கள் என்றார் அவர்.

    வாராணசி மக்களவைத் தொகுதியில் பாஜக பிரதமர் வேட்பாளரும் குஜராத் மாநில முதல்வருமான நரேந்திர மோடி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆம்ஆத்மியின் தேசிய அமைப்பாளரும் தில்லியின் முன்னாள் முதல்வருமான அர்விந்த் கேஜரிவால் போட்டியிடுகிறார்.

    அமேதி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அக் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் அவரை எதிர்த்து ஆம்ஆத்மி கட்சியின் தலைவர் குமார் விஸ்வாஸ் போட்டியிடுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai