Enable Javscript for better performance
ஹெராயின் வழக்கு: நைஜீரியருக்கு சிறை- Dinamani

சுடச்சுட

    

    இந்தியாவில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கியிருந்தது, ஹெராயின் வைத்திருந்தது உள்ளிட்ட குற்றத்துக்காக நைஜீரிய இளைஞருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தில்லி சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

    நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர் இதோம் சைமன் கிமிúஸ (33). 2011, டிசம்பர் 7-ஆம் தேதி கஷ்மீரி கேட் அருகே 300 கிராம் ஹெராயின் போதைப் பொருள் வைத்திருந்ததாக அவரை போலீஸார் கைது செய்தனர். அதன்பின் அவரிடம் விசாரணை நடத்தியதில், அவருடைய விசா காலம் முடிந்தும் இந்தியாவில் தங்கியிருந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து, போதை மருந்துகள் மற்றும் மனோவியல் பொருள்கள், வெளிநாட்டவர் சட்டத்தின்படி அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டன. இவ் வழக்கு தில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷாயில் ஜெயின் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

    விசா காலம் முடிந்தும் இந்தியாவில் தங்கியிருந்த வழக்கில் இதோம் சைமன் கிமிúஸவுக்கு ரூ. 15,000 அபராதம், போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    முன்னதாக "தான் குற்றமற்றவர் என்றும் தனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதாகவும் சமீபத்தில் தன் மனைவி இறந்ததால் அவர்களை வளர்க்க வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும் நீதிபதியிடம் அவர் முறையிட்டார். ஆனால், தண்டனைக் காலத்தில் அவரின் நன்னடத்தையைக் கண்டறிந்த பின்னரே தண்டனை குறைப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai