Enable Javscript for better performance
இளைஞர் தாக்கிக் கொலை: 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பக்கத்து வீட்டுக்காரர் கொலை செய்ப்பட்ட வழக்கில் மூன்று பேரை தில்லி போலீஸார் கைது செய்தனர்.

    மேற்கு தில்லி திலக் விஹார் பகுதியைச் சேர்ந்த குர்மீத் சிங் (22), சுக்விந்தர் சிங் (24), பியாரா சிங் (24) ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இவர்களது பக்கத்து வீட்டில் ரமேஷ் என்பவர் வசித்து வந்தார்.

    கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி ரமேஷின் நண்பர் சன்னி என்பவரை குர்மீத் அடித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் ரமேஷுக்கும் குர்மீத் உள்ளிட்ட மூவருக்கும் இடையே வாக்குவாதம்  ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் பரஸ்பரம் கொலை மிரட்டல் விடுத்து வந்தனர். இந் நிலையில், குர்மீத், அவரது நண்பர்கள் சுக்விந்தர் சிங், பியாரா சிங் ஆகிய மூவரும் ரமேஷின் வீட்டுக்கு சென்று அவரைத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ரமேஷ் உயிரிழந்தார்.

    இந்த சம்பவத்தில் தலைமறைவான மூவரையும் போலீஸார் தேடி வந்தனர். இந் நிலையில், சுபாஷ் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மூவரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai