Enable Javscript for better performance
ஏப்ரல் 29-இல் தெற்கு தில்லி மேயர் தேர்தல்- Dinamani

சுடச்சுட

    

    தெற்கு தில்லி மாநகராட்சி மேயர் தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தெற்கு தில்லி மாநகராட்சி செயலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    தெற்கு தில்லி மேயர், துணை மேயர், நிலைக்குழுக்கான 3 உறுப்பினர்கள், கல்விக் குழுக்கான ஓர் உறுப்பினர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி நடைபெறும். மேற்கண்ட பதவிகளுக்கான மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 21-ஆம் தேதி என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேயர் தேர்வு: தில்லி மாநகராட்சிகளுக்கு ஆண்டுதோறும் மேயர், துணை மேயர் தேர்தல் நடைபெறுவது வழக்கம். 3-ஆவது ஆண்டில் தாழ்த்தப்பட்டோர் பிரிவினருக்கு ஒதுக்க வேண்டும். இதையடுத்து, தில்லியில் உள்ள மூன்று மாநகராட்சிகளிலும் பாஜக ஆட்சி செய்து வருகிறது.

    தெற்கு தில்லி மாநகராட்சியில் மேயர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேயர் பதவிக்கான உறுப்பினரை தேர்வு செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து, மனு தாக்கல் செய்யவதற்கு இறுதிநாள் நெருங்கிவிட்ட நிலையில் மேயர் தேர்தல் விறுவிறுப்படைந்துள்ளது.

    பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ள நிலையில் மேயர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது. இதையடுத்து, இம் முறை தெற்கு தில்லி மேயர் பதவிக்கு நான்கு பேரை பாஜக வட்டாரங்கள் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவர்களின் விவரம்:

    பாஜக உறுப்பினர் குஷிராம் (அம்பேத்கர் நகர்): தில்லி பல்கலைக்கழகத்தின் ஷாஹீத் பகத் சிங் கல்லூரியின் மாணவர் சங்கத் தலைவராக இருந்தவர். அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் செüத்ரி பிரேம் சிங்கை எதிர்த்துப் போட்டியிட்டவர். கடந்த மாநகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரமோத் குமாருக்கு எதிராக போட்டியிட்டு 3 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்.

    பிரதீப் குமார் (சாவ்லா): கடந்த மாநகராட்சித் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட இவர், பாஜக வேட்பாளர் தீபக் மெஹராவை 348 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தவர். ஆனால், இரு மாதங்களுக்கு முன்னர் பாஜகவில் இணைந்துவிட்டார். பட்டதாரியான இவர் பெயரும் மேயர் வேட்பாளருக்குப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    உறுப்பினர் கரம் வீர் சேகர் (விகாஸ்புரி): கடந்த மாநகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சாகிப் குமாரை 2 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தவர். பட்டதாரியான இவர் பெயரும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    கியாசி ராம் (ஆயா நகர்): ஆயா நகர் உறுப்பினர் கியாசி ராம் கடந்த மாநகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கர்தார் சிங்கைவிட 1,800 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். இவரது பெயரும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    வடக்கு, கிழக்கு தில்லி: வடக்கு தில்லி மாநகராட்சிக்கு ஏப்ரல் 29-ஆம் தேதியும், கிழக்கு தில்லி மாநகராட்சிக்கு ஏப்ரல் 28-ஆம் தேதியும் மேயர் தேர்தல் நடைபெறவுள்ளது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai