Enable Javscript for better performance
சித்திரைத் திருவிழா நிறைவு- Dinamani

சுடச்சுட

    

    தில்லி தமிழ்ச் சங்கத்தின் சித்திரைத் திருவிழா திங்கள்கிழமை நிறைவடைந்தது.

    தில்லி தமிழ்ச் சங்கத்தில் தமிழ்ப் புத்தாண்டைக் குறிக்கும் "சித்திரைத் திருவிழா-2014'

    கடந்த சனிக்கிழமை தொடங்கியது. மூன்று நாள் நடைபெற்ற நிகழ்ச்சியின் நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

    இதில் ஜெயஸ்ரீ ரங்கநாதனின் மாணவி கலைவாணி கணேஷின் தமிழிசை நிகழ்ச்சி இடம் பெற்றது. வி.எஸ்.கே.அண்ணாதுரை (வயலின்), கும்பகோணம் என்.பத்மநாபன் (மிருதங்கம்), மன்னை என்.கண்ணன் (கடம்) ஆகியோர் பக்கம்வாத்தியம் வாசித்தனர்.

    ஆண்டு விழா: சித்திரைத் திருவிழா நிûறைவு விழாவைத் தொடர்ந்து, தில்லி தமிழ்ச் சங்கத்தின் 69-ஆம் ஆண்டு விழாவை சங்க நிர்வாகிகள் கேக் வெட்டி கொண்டாடினர். சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ். கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் எம்.ஆறுமுகம் வரவேற்றுப் பேசினார். அப்போது, தமிழ்ச் சங்கத்தின் சாதனைகளை பட்டியலிட்டார்.

    சங்கத்தின் பொதுச் செயலாளர் இரா. முகுந்தன், துணைத் தலைவர் ரமாமணி சுந்தர், பொருளாளர் ப. அறிவழகன், செயற்குழு உறுப்பினர்கள் எம். ஆறுமுகம், பி. சங்கர், பி. குமார், ஏ. வெங்கடேசன், முன்னாள் செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஆர். ரங்கராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai